நம்மில் பெரும்பாலானோருக்கு, காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால் தான், உடலுக்கு சுறுசுறுப்பே கிடைக்கும். காபியில் உள்ள காஃபின் உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது. சோர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்க, காபி அதிகம் குடிக்கும் வழக்கமும் பலருக்கு உள்ளது. ஆனால் அதிக அளவில் ஆன காபி குடிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்து விடும். அளவோடு இருந்தால் பிரச்சனை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
நாள் ஒன்றுக்கு எத்தனை கப் காபி அருந்தலாம்
பெரியவர்கள் தினமும், 400 மில்லி கிராம் என்ற அளவிற்கு அதிகமாக, காஃபின் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரு கப் காபியில் சுமார் 95 மில்லி கிராம் காஃபின் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, நாள் ஒன்றுக்கு நான்கு கப் காபி குடித்தாலே போதுமானது. இந்த அளவை மீறுவதால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். 7 முதல் 12 வயது குழந்தைகள், நாள் ஒன்றுக்கு 70 மில்லி கிராம் காஃபின் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் குடிக்கும் காபியின் அளவு, இரண்டு கப் காபிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காபியின் பாதிப்புகள்
காபியில் இருக்கும் காஃபின் மூலம் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சாப்பிட்ட 15 நிமிடங்களில் உங்களுக்கு உற்சாகம் பிறக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக, நமது உடலில் இருந்து காபின் வெளியேற அதிக நேரம் எடுக்கும். சுமார் ஆறு மணி நேரத்தில், நாம் சாப்பிட்ட காஃபினின் 75% மட்டுமே வெளியேறி இருக்கும். காஃபின் முழுமையாக வெளியேற சுமார் 10 மணி நேரம் ஆகும். நான் பல நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
உயர் ரத்த அழுத்தம்
அதிக அளவில் காபி குடிப்பது, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். ரத்த நாளங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுவதால், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், காபியை நிச்சயம் அளவோடு அருந்த வேண்டும். அளவோடு காபி குடிப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
செரிமான பிரச்சனை
அளவிற்கு அதிகமாக காபி போட்டுக் கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், வயிற்றில் அதிக அளவில் இழப்பை ஹார்மோன்கள் வெளியாவதால், வாயு, அமிலத்தன்மை, வயிற்றுக்குப் புக்கு போன்ற ஆபத்துகள் அதிகரிக்கிறது.
தூக்கமின்மை
அளவிற்கு அதிகமான காபி அருந்துவதால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு விட்டவர்கள் என்றால், காபி அளவோடு அருந்துவது நல்லது.
எலும்புகள்
அதிகமாக காபி அருந்துவதால், எலும்புகள் பலவீனமடையும். எலும்புகளில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி, பலவீனமடைந்து, ஆஸ்டியோ ப்ரொஸிஸ் நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
காபி குடிக்க ஏற்ற நேரம் எது
காபி குடிக்க சிறந்த நேரம் காலை நேரம். ? காலையில் நமக்கு உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது என்பதால் காலையில் காபி அருந்துவது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. மாலையிலும் காபி சாப்பிடறது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். ஆனால் இரவில் காபி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். அதோடு பெரிய கோப்பையில் காபி குடிக்காமல் சிறிய கோப்பையில் காபி அருந்துவது நல்லது. இதன் மூலம் நமக்குள் உட்கொள்ளும் கேப்பின் அளவை கட்டுப்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.