கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கம். இது இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பிரிக்கும் பணிகளை செய்கிறது. மேலும், உடலின் தேவைக்கு ஏற்ப பல்வேறு உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் பணியையும் மேற்கொள்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யும் கல்லீரலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஏற்படும். ஆரோக்கியமான கல்லீரலில் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு உள்ளது. ஆனால் இந்த அளவு கல்லீரலின் எடையில் 5-10% அதிகமாக இருந்தால், அது ஒரு பிரச்சனையாக மாறும். 7 முதல் 30 சதவிகித மக்கள் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கல்லீரல் வீக்கம், அடிக்கடி வாந்தி, பசியின்மை, உணவு நன்றாக ஜீரணிக்காமல் இருப்பது, அடிக்கடி சோர்வாக உணர்தல், பலவீனமாக உணர்தல், எடை இழப்பு, அடிவயிற்றின் மேல் பகுதியில் வீக்கம் ஆகிய அறிகுறிகள் தென்படும். அதேபோல் கல்லீரல் கொழுப்பு அதிகமாக இருப்பதற்கான சில அறிகுறிகள் கை மற்றும் கால்களிலும் தோன்றும்.
மேலும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும் கண்டிப்பா வெயிட் குறையும்!
கைகள் மற்றும் கால்களில் அறிகுறிகள்:
கல்லீரலில் கொழுப்பு இருப்பதற்கான அறிகுறிகள் பலருக்கும் வெளிப்படையாக இருப்பதில்லை. மது அருந்தாதவர்களுக்கு நோய் முற்றிய பிறகே அதன் தீவிரத்தன்மை வெளியே தென்படத் தொடங்கும். கைகள் மற்றும் கால்களில் அரிப்பு ஏற்படுவது கொழுப்பு கல்லீரல் அறிகுறியாக இருக்கலாம். இந்த அரிப்பு பிரச்சனை மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும்.
கைகள் மற்றும் கால்கள் ஏன் அரிப்பு?
இருப்பினும், கல்லீரல் நோயுடன் தொடர்புடைய அரிப்புக்கான காரணத்தை மருத்துவ நிபுணர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை. ஆனால் சில நிபுணர்கள் இது பல காரணிகளின் விளைவாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். உதாரணமாக, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோலின் கீழ் உப்பு அதிகமாகக் குவிவதால் பித்தம் ஏற்படுகிறது. இது கைகால்களில் அரிப்பை ஏற்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாகும் என கூறுகிறார்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதற்குப் பின்னால் மற்றொரு காரணம் உள்ளது. இரத்தத்தில் சீரம் அல்கலைன் பாஸ்பேடேஸ் என்சைம் இருப்பதால், கொழுப்பு கல்லீரல் நோயாளிகளின் கை மற்றும் கால்களில் அரிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தடுக்க வழிமுறைகள் என்ன?
இந்த நோயைத் தடுக்க, எடையைக் கட்டுப்படுத்தவும்.
உணவில் கார்போஹைட்ரேட் தவிர்க்கவும்.
மது அருந்துவதைத் தவிர்த்து, உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.
மேலும் படிக்க | White Hair Problem: நரை முடி கருப்பாக மாற இயற்கை வைத்தியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ