அழகாக இருக்க விரும்பாதவர் எவரும் இருக்க மாட்டார்கள். இளமையில் நமது சருமம் இறுக்கமாக இருக்கும். தோலின் துளைகள் சிறியதாக இருக்கும், ஆனால் 30 வயதிற்குப் பிறகு, தோலின் துளைகள் பெரிதாகத் தொடங்கும். இதனால் நமது தோல் தளர்வாகத் தொடங்குகிறது. மேலும் சரியான நேரத்தில் சருமத்தை பராமரிக்கவில்லை என்றால், முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பித்து, முகம் டேமேஜ் ஆக ஆரம்பிக்கும். இதனால் சரியான நேரத்தில் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே உங்கள் முக சருமத்திற்கு நன்மை பயக்கும் சில எளிய குறிப்புகளை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள்: சருமம் வறண்டு போகாமல் இருக்க தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள், குறிப்பாக கோடை காலத்தில், இது முக்கியமாகும். நம் உடலில் 70% நீர் தேவை. இது தவிர கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் போன்றவற்றை பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
இரவில் தூங்கும் முன் சில குறிப்புகள்: இரவில் தூங்கும் முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும், இதற்கு ஃபேஸ் கிளீனரையும் பயன்படுத்தலாம். இது தவிர வைட்டமின் சி உள்ள பொருட்களை முகத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
காலையில் எழுந்தவுடன் சில குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன், உங்கள் முகத்தை சுமார் 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது முகத்தின் துளைகளின் அளவைக் குறைக்க உதவுகிறது.
சன்ஸ்கிரீனும் அவசியம்: நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் எங்கு இருந்தாலும் சரி, ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு உங்கள் முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இதன் காரணமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் முகத்தை பாதிக்காது.
ஒரு தோல் பராமரிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கவும்: நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் எழுந்தவுடன் முதலில் முகத்தை பால் கொண்டு சுத்தம் செய்யவும், உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் காய்ச்சிய பாலையும், தோல் வறண்டிருந்தால் பச்சை பாலையும் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும். இது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் மற்றும் சருமத்தின் துளைகள் வறண்டு போகாமால் இருக்கு உதவும்.
இலவங்கப்பட்டை ஃபேஸ் பேக்: முகப்பரு பிரச்சனையைக் கட்டுப்படுத்த, இலவங்கப்பட்டை ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இதற்கு இலவங்கப்பட்டை தூள், தலா ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கவும். முகத்தில் 15 நிமிடங்கள் வைத்திருங்கள். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவவும்.
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR