நாய்கள் கூட நடமாட கூடாது... கடுமையான லாக்டவுனை விதித்துள்ளது இந்த நாடு..!!!

குளிர்காலம் தொடங்கியவுடன் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது முறையாக பரவி, கொரொனா வைரஸின் அலை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பல நாடுகள் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டாவது லாக்டவுனை தொடங்கின. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2020, 04:44 PM IST
  • அதிகாரிகள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
  • குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு முறை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்.
  • அதுவும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே. முகமூடி அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே அவருக்கு வீட்டை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படும்.
நாய்கள் கூட நடமாட கூடாது... கடுமையான லாக்டவுனை விதித்துள்ளது இந்த நாடு..!!! title=

குளிர்காலம் தொடங்கியவுடன் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது முறையாக பரவி, கொரொனா வைரஸின் அலை ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பல நாடுகள் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டாவது லாக்டவுனை தொடங்கின. இருப்பினும், உலகில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில், மிக கடினமான லாக்டவுனை அமல்படுத்தியுள்ளது.

தென் ஆஸ்திரேலியா கடுமையான லாக்டவுனை (Lockdown) அறிவித்துள்ளது. அதன் கீழ் யாருக்கும் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை, தங்கள் செல்லப்பிராணிகளை உடற்பயிற்சி செய்வதற்கோ அல்லது நடப்பதற்கோ கூட்டிசெல்லக் கூட அனுமதி இல்லை.

தலைநகர் அடிலெய்டில், ஒரு துப்புரவாளர் மூலம், இருபத்தி மூன்று பேருக்கு பரவியதை அடுத்து கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட, எல்லைகளைத் தாண்டி மாநிலத்திற்கு வரும் மக்களை தனிமைப்படுத்த உதவும் பணியில் இருந்த துப்புரவாளர் ஒருவர் மூலம் இந்த 23 பேருக்கு தொற்று பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கிறது.

"நாங்கள்  கடினமான நடவடிக்கையை எடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விரும்புகிறோம். எங்களால் முடிந்தவரை விரைவாக கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம்" என்று மாநில பிரதமர் ஸ்டீவன் மார்ஷல் கூறினார்.

அதிகாரிகள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு முறை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார், அதுவும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே. முகமூடி அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே அவருக்கு வீட்டை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படும்.  அது தவிர, அனைத்து பள்ளிகள், கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட பயிற்சிகளுக்காகவோ அல்லது செல்லப்பிராணிகளை வாக்கிங் கொண்டு செல்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.

ALSO READ | கிறிஸ்துமஸுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி... Pfizer-BioNTech அறிவிப்பு..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News