அசிடிட்டி பிரச்சனையால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் பால், பெருஞ்சீரகம் மூலம் அதனை சரிசெய்யலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2024, 09:05 PM IST
  • அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா?
  • அசிடிட்டி உங்களுக்கு இருக்க வாய்ப்பு
  • பால், பெருஞ்சீரகம் மூலம் குணப்படுத்தலாம்
அசிடிட்டி பிரச்சனையால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? title=

மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், அசிடிட்டி, வாயு, அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. உங்களுக்கு தெரியுமா.. தவறான உணவுப் பழக்கம் பல வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், பெரும்பாலும் மக்கள் அசிடிட்டி மற்றும் வாயுவை போக்க கடைகளில் கிடைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது தவறு.

மேலும் படிக்க | டூத்ப்ரஷ் பயன்படுத்தாமலே பற்கள் வெண்மையாக இருக்க சில வழிகள்!

தற்போது பலவீனமான செரிமானம் உள்ளவர்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில், அஜீரணம் காரணமாக, நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் மற்றும் வாந்தி கூட ஏற்படலாம். எனவே, இதிலிருந்து விடுபட, இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு நிச்சயமாக உங்களுக்கு உதவும். பெருஞ்சீரகம் மற்றும் குளிர்ந்த பால்: அஜீரணம் மற்றும் நெஞ்சு எரிச்சலில் இருந்து நிவாரணம் பெற, பெருஞ்சீரகம் கலந்த குளிர்ந்த பால் குடிப்பது நல்லது. ஏனெனில், குளிர்ந்த பால் அமில வீக்கத்தை குறைக்கவும், நெஞ்செரிச்சலை போக்கவும் உதவுகிறது.

மேலும், பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது அமிலத்தை உறிஞ்சி அமிலத்தன்மையை குறைக்கிறது. குளிர்ந்த பால் குடிப்பதினால், வயிற்றின் pH சமநிலையை பராமரிக்கவும், அமில ரிஃப்ளக்ஸ் குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, பெருஞ்சீரகம் அமில வீக்கத்தைக் குறைக்கவும், வயிற்று வாயுவை நீக்கி, உணவை எளிதில் ஜீரணமாக்க பெரிதும் உதவுகிறது.

தயாரிப்பது எப்படி? 

குளிர்ந்த பாலில் 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்க வேண்டும். இது வயிற்றை விரைவில் சுத்தமாக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை எளிதில் நீக்குகிறது. இந்த பாலில் சர்க்கரையை சேர்க்க கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். சர்க்கரை கலந்து குடித்தால், அமிலத்தன்மை மேலும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின் அறிவுரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News