சுகர் குறைய ஒரேடியா சுகர கைவிடனுமா? பின்னணி உண்மை என்ன?

Diabetes Control Tips: மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரையில் கலோரிகள் ஏராளமாக காணப்படுகின்றன. உணவு மற்றும் பானங்களில் சர்க்கரையின் அதிகப்படியான பயன்பாடு பசியின்மைக்கு வழிவகுக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 20, 2023, 02:35 PM IST
  • சர்க்கரை சாப்பிடுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா.
  • நீரிழிவு நோய்க்கு சர்க்கரை நோய் என்று வழக்குமொழியில் கூறப்படும்.
  • இனிப்பு உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா.
சுகர் குறைய ஒரேடியா சுகர கைவிடனுமா? பின்னணி உண்மை என்ன? title=

நீரிழிவு நோயை சர்க்கரை எவ்வாறு பாதிக்கிறது: தேநீர், பால் போன்றவற்றை சுவையாக மாற்ற நாம் சர்க்கரை சேர்த்துக் கொள்கிறோம். அதனால் அவற்றின் சுவை மேலும் அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் இதை அதிகமாக சாப்பிட ஆரம்பித்தால், உங்கள் உடல்நிலை மோசமடைய அதிக நேரம் எடுக்காது. அத்துடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி சர்க்கரை நோயை உண்டாக்க அதிக நேரம் எடுக்காது. ஆரோக்கியமாக இருக்க சர்க்கரையை அதிகளவில் சாப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அது அறிவியல் ரீதியாக சரியானதா? இது உண்மையில் நோய்களின் அபாயத்தை குறைக்கிறதா? 

சர்க்கரை இயற்கையாகவே பழங்கள், காய்கறிகள் (பிரக்டோஸ்) மற்றும் பால் உணவுகள் (லாக்டோஸ்) ஆகியவற்றில் காணப்படுகிறது. இது உணவு உற்பத்தியாளர்களால் அல்லது வீட்டிலேயே உணவு மற்றும் பானங்களில் தனித்தனியாக சேர்க்கப்படுகிறது. இந்த வகையான சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் 'ஃப்ரீ சர்க்கரைகள்' என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை தூய பழச்சாறுகள், சிரப்கள் மற்றும் தேனிலும் உள்ளன.

மேலும் படிக்க | Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பானங்கள்!

சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?
பிரிட்டிஷ் நீரிழிவு சங்கத்தின் (Diabetes.Org) கூற்றுப்படி, நீரிழிவு நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன - டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு... டைப் 1 நீரிழிவு என்பது நிச்சயமாக இனிப்பு அல்லது சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படாது. உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சிஸ்டம், இன்சுலின் உற்பத்தியாகும் செல்களை அழித்துவிடுகிறது. இதனால் உடலால் இன்சுலின் சுரக்க முடியாமல் போவதால் டைப் ஒன்று நீரிழிவு ஏற்படுகிறது.

டைப் 2 நீரிழிவு என்பது உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதை உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மருந்துகள் ஆகியவற்றின் மூலம் கட்டுக்குள் வைப்பதை குறிக்கிறது. டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கு சர்க்கரை மட்டுமே ஒரே காரணம் என்று கூற முடியாது. இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் போது நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்கிறீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உங்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. உடல் பருமன் என்பது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் முதல் காரணமாக இருக்கின்றது. எனவே இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் நேரடியாக ஏற்படாது; ஆனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த உணவுகளில் சேர்க்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட சர்க்கரைகள் உள்ளன:
சோடா மற்றும் ஆற்றல் பானங்கள் உட்பட சர்க்கரை பானங்கள்
மிட்டாய்
கேக்குகள், குக்கீகள்
கெட்ச்அப் மற்றும் பல பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இனிப்பு பால் மற்றும் தயிர்
காலை உணவு பார்கள் மற்றும் தானியங்கள்
ஐஸ் கிரீம்

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Guava Benefits; பைல்ஸ் பிரச்சனைக்கு கொய்யா எனும் அருமருந்து..! வாயு பிரச்சனைக்கும் நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News