மிரட்டும் நிபா வைரஸ்... பழங்கள் மூலம் பரவுவதாக அதிர்ச்சித் தகவல்..!!

கேரளாவின் மலப்புரத்தில் சமீபத்தில் பழ வௌவால் மூலம் தொற்றுக்குள்ளான பிளம் பழத்தை சாப்பிட்ட 14 வயது சிறுவன் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2024, 03:08 PM IST
  • நிஃபா வைரஸ் பரவல் முதன்முதலில் 1999 ஆம் கண்டறியப்பட்டது.
  • 2018-ம் ஆண்டு கேரளாவில் இந்த வைரஸால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • நிபா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கை.
மிரட்டும் நிபா வைரஸ்... பழங்கள் மூலம் பரவுவதாக அதிர்ச்சித் தகவல்..!! title=

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மக்கள் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய வருகிறது. பழ வெளவால்களால் பரவும் இந்த நோய், அதிக அளவில் இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதால், பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவின் மலப்புரத்தில் சமீபத்தில் பழ வௌவால் மூலம் தொற்றுக்குள்ளான பிளம் பழத்தை சாப்பிட்ட 14 வயது சிறுவன் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழம் வௌவால்களால் மாசுபட்ட பழங்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) நடத்திய ஆய்வுகள் மூலம் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் உள்ள பழ வெளவால்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் நிபா வைரஸ் ஆன்டிபாடிகளைக் கண்டறிந்துள்ளது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பழ வெளவால்கள் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றில் வைரஸை வெளியேற்றும். இவை பழங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​அந்த கழிவுகள் உடலுக்குள் செல்லும் போது, மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது. சமீபத்திய மலப்புரம் வழக்கில் நிபா வைரஸினால் பாதிக்கபப்ட்ட சிறுவன் பழம் வௌவால்களுக்கு மிகவும் பிடித்தமான பிளம் பழத்தை உட்கொண்டதால், அவனுக்கு தொற்று ஏற்பட்டது.

மனிதர்கள் தவிர பாதிக்கப்பட்ட பழ வெளவால்கள் பன்றிகள், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற பிற விலங்குகளுக்கும் வைரஸை அனுப்பலாம்.  பின்னர்  இவைகளிலன் மூலம் நிபா வைரஸ் மனிதர்களுக்கு மேலும் பரவலாம். 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோட்டில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | டெங்கு காய்ச்சலா? விரைவில் குணமாக இந்த உணவுகளை டயட்டில் சேருங்கள்

நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள்

வைரஸ் மனிதர்களைப் பாதித்த மனிதர்களுக்கு காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் உள்ளிட்ட கடுமையான சுவாச மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், மூளையழற்சி கோமா அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும். நிபா வைரஸ் நோய்த்தொற்றுகளுடன் தொடர்பு ஏற்பட்டால் ஏற்படும் இறப்பு விகிதம் தொற்றின் தீவிரத்தை பொறுத்து, 40% முதல் 75% என்ற அளவில் உள்ளது.
அசுத்தமான பழங்களால் நிபா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

பழம் வெளவால்களால் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஆபத்தைக் கருத்தில் கொண்டு, நிபா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 

1. கீழே விழுந்த அல்லது கழுவப்படாத பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

2.  எப்போதும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு உப்பு சேர்த்த வெதுவெதுபான நீரில் நன்கு கழுவவும்.

3. பழ வெளவால்களால் மாசுபடுவதை தடுக்க மூடிய கொள்கலன்களில் பழங்களை மூடி வைக்கவும். 

4. வௌவால்கள் அதிகம் இடங்களில் பழங்களை திறந்த நிலையில் வைப்பதைத் தவிர்க்கவும்.

 5. வெளவால்கள் அதிகம் கூடும் இடங்களில் நீங்கள் இருந்தால் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். 

6. பழ வெளவால்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் செல்லாமல் இருப்பதை  உறுதிப்படுத்தவும். இதன் மூலம் பிற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்.

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவலால், கேரளாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபத்தான நிஃபா வைரஸ் பரவுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக எல்லையோரப் பகுதிகளில் மாநில சுகாதாரத் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சிவந்துபோதல், மூளைக்காய்ச்சல், மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 17 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதன் முடிவுகள் வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கேரளா சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

நிஃபா வைரஸ் பரவல் முதன்முதலில் 1999 ஆம் கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு தடுப்பூசி இல்லை. 2018-ம் ஆண்டு கேரளாவில் இந்த வைரஸால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், கேரளாவில் மீண்டும் நிஃபா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சிறப்பு மருத்துவக் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் கற்றாழை: இப்படி தினமும் சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News