சமீப காலங்களில் மிக இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்க வாதம் உள்ளிட்ட இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை, ஆகியவை முக்கிய காரணம். இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொண்டால், பகக் வாதம், மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படுதில் இருந்து தப்பிக்கலாம்.
இதய தமனி அடைப்பு என்பது இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் நாளடைவில் இரத்தக் குழாய்களில் சேர்ந்து இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.
இதய அடைப்பின் அறிகுறிகள்
இதய அடைப்பு, கரோனரி தமனி நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் சேருக்கும் அழுக்குகள் மற்றும் கொழுப்புகள், ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது நிலை கண்டறியப்படாமல் மோசமானால், மாரடைப்புக்கு வழிவகுக்கும். இந்நிலையில், ஒருவர் புறக்கணிக்கக் கூடாத இதய அடைப்பின் முக்கிய 5 அறிகுறிகளை (Health Tips) பற்றி அறிந்து கொள்ளலாம்.
இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பின் அறிகுறிகள்
1. எப்போதும் சோர்வாக இருப்பது
மூன்று வேலையும் சாப்பிட்டு, இரவு முழுவதும் நன்றாக தூங்கிய, பிறகும், தொடர்ந்து சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வது உங்கள் இதய தமனிகளீல் அடைப்பு ஏற்பட்டிருப்பதை குறிக்கலாம். உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுத்த பிறகும் இந்த சோர்வு நீடித்தாலோ, உந்துதல் இல்லாமை அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவையும் ஏற்பட்டாலோ, உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளவும்.
2. தூக்கமின்மை பிரச்சனை
நம்மில் பெரும்பாலானோர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களாக இருக்கலாம், ஆனால் இது தூக்கமின்மையின் அறிகுறி மட்டுமல்ல, நீங்கள் கற்பனை செய்வதை விட தீவிரமான பிரச்சனை ஒன்று இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அடிக்கடி எழுந்திருத்தல், தூங்குவதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் அல்லது வியர்ப்பது போன்ற போன்ற உணர்வு போன்றவை இதய அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் படிக்க | உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? இந்த தோல் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்!
3. மூச்சு திணறல்
உங்கள் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், குறிப்பாக நடைபயிற்சி அல்லது படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற செயல்களின் போது, மூச்சு திணறல் ஏற்பட்டால், உங்கள் இதயம் உங்களுக்கு ஏதாவது தீவிரமாகச் சொல்ல முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் - இது இதய அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் போராடுகிறது என்பதை இது குறிக்கிறது.
4. விறைப்புத்தன்மை குறைபாடு
விறைப்புத்தன்மை என்பது ஆண்களுக்கு இதய அடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறியாகும், இந்த நிலை உங்கள் இதயத்தில் ஏதோ தீவிரமான பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அது தான் இதய தமனிகளில் அடைப்பு. ஏனெனில் ஆண்குறியில் இரத்த ஓட்டம் குறைவதால் விறைப்புத்தன்மையை அடைவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
5. அசாதாரண இடங்களில் வலி
தாடை, தோள்பட்டை, கை அல்லது முதுகில் வலி, குறிப்பாக வேலை செய்யும் போது வலி இருந்தால், உங்கள் இதயத்தில் ஏதோ தீவிரமான பிரச்சனை இருப்பதைக் குறிக்கலாம். இது இதய அடைப்புக்கான அறிகுறியாகும் மற்றும் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படக்கூடாது. இதயத்திலிருந்து வரும் வலி சமிக்ஞைகள் உடலின் மற்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | முடி வேகமாக வளர இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ