ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த பழங்களும், அதன் விதைகளும் சூப்பர்ஃபுட்டாக மாறும்

Fruit Seeds For Diabetes: சில பழங்கள் மட்டுமல்ல, அவற்றின் விதைகளும் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 19, 2023, 10:58 PM IST
  • நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பழவிதை
  • உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பழம்
  • ஊட்டச்சத்து சுரங்கம் பழமும்-விதையும்
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த பழங்களும், அதன் விதைகளும் சூப்பர்ஃபுட்டாக மாறும் title=

உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாதபோது, கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் பாதிக்கப்படும்போது இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது வகை 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரப்பு குறையும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது நீண்ட காலம் நீடித்தால், அது வேறு பல நோய்களை ஏற்படுத்தும். சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் மாரடைப்பு என உயிர் பறிக்கும் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. 

டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது சிரமமானதாக இருந்தாலும், ரத்த சர்க்கரையை குறைப்பதில் நல்ல பலனளிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு முறை மட்டுமே.

இதனுடன், மருத்துவர் அளிக்கும் சிகிச்சையும் அவசியம், இரண்டும் இணையும்போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாடு எளிதாகிறது. எனவே உணவில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பழங்கள் மட்டுமல்ல, சில பழங்களின் விதைகளும் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் சில பழங்கள் மற்றும் அவற்றின் விதைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | தேங்காய் சர்க்கரை... வழக்கமான சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக இருக்குமா..!!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தர்பூசணி விதைகள்
நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி மட்டுமல்ல அதன் விதைகளையும் சாப்பிடலாம். ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் தர்பூசணி விதைகளில் காணப்படுகின்றன, மேலும் இது துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பல வகையான வைட்டமின்களின் மூலமாகும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஜாமுன் விதைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஜாமுன் பழத்தை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, இது இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்க உதவுகிறது. ஜாமுன் விதைகள் மிகவும் திறம்பட செயல்படுகின்றன, இதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மாதுளை விதைகள்
மாதுளை சாறு குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் அதை உட்கொள்வது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கிறது. ஆனால் மாதுளை விதைகளை சாப்பிடலாம். அனார்தனா என்று அழைக்கப்படும் இதன் விதைகளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அதிக உதவியாக இருக்கும்.

Pomegranate
 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் முலாம்பழம் விதைகள்
முலாம்பழம் விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகள் எந்த கவலையும் இல்லாமல் அதை உட்கொள்ளலாம். நார்ச்சத்து உள்ளிட்ட பல சிறப்பு ஊட்டச்சத்துக்கள் முலாம்பழம் விதைகளில் காணப்படுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கிவி விதைகள்
நீரிழிவு நோயாளிகளும் தங்கள் உணவில் கிவியை எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பல சிறப்பு பண்புகள் கிவி விதைகளிலும் காணப்படுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கிவியை உண்ணும்போது ஒருபோதும் அதன் விதைகளை எடுத்துவிட வேண்டாம்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | கொத்தமல்லியில் கொத்து கொத்தாய் கொட்டிக்கிடைக்கும் நன்மைகள்.. பல பிரச்சனைகளுக்கு ஒரே வீட்டு வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News