Natural Remedies for Arthritis, Joint Pain: இன்றைய கால கட்டத்தில், மூட்டு வலி என்பது முதியர்களுக்கு மட்டுமல்லாது, 40+ வயதிற்குப் பிறகே மிகவும்பொதுவான பிரச்சனையாகிவிட்டது. சில நேரங்களில் இந்த வலி மிகவும் கடுமையானதாக நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு. கடினமாகி விடும். மூட்டு வலிக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, தற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. மேலும், இதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்நிலையில், வீட்டு வைத்தியம் மூலம் இதனை குணப்படுத்த உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் பால்
மஞ்சள் வலியை போக்கும் அருமருந்தாகும். மூட்டு வலி உள்ளவர்கள் மஞ்சள் பால் சாப்பிடுவதால், எலும்புகள் மற்றும் தசைகளில் உள்ள வலி நீங்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் கலவை நமது மூட்டுகளில் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு சக்தியாகும். மஞ்சள் நீண்ட காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பாலுடன் மஞ்சளை உட்கொள்வதால் அதன் பலன் (Health Tips) முழுமையாக கிடைக்கும்.
இஞ்சி டீ
இஞ்சி டீ மூட்டு மூட்டு வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இஞ்சி டீ தயாரிக்க, ஒரு கப் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்றாக துருவி சேர்த்து, தண்ணீர் கொதித்ததும், அதை வடிகட்டி குடிக்கவும். கீல்வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதில் இஞ்சி ஒரு சிறந்த மருந்து என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அன்னாசி
அன்னாசிப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியைப் போக்க உதவும். இதுவும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. கால்ல்ஷியம் மட்டுமின்றி, விட்டமின் சி சத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஆரஞ்சு ஜூஸ் அருந்துவதும் பலன் தரும்
பூண்டு
உணவின் சுவையை அதிகரிக்க பயன்படும் பூண்டு, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில், பூண்டு ஒரு கார்மினேட்டிவ் என்று கருதப்படுகிறது. எனவே, உடலில் ஏற்படும் வாத நோய்களில் இருந்து நிவாரணம் பெற பூண்டை பயன்படுத்துவது பலன் தரும். இது தவிர, பூண்டில் உள்ள அல்லிசின், மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. பூண்டின் இயற்கையான மருத்துவ பண்புகள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் விரைவாகக் குறைக்கின்றன.
கிரீன் டீ
கிரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது தசை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. காலை, மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது மூட்டுகளின் வீக்கத்தையும் குறைக்கும்.
கொத்தமல்லி
கொத்தமல்லி இலைகள் மருத்துவ குணங்களின் களஞ்சியம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம், தயாமின், வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும், உங்கள் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கு. கொத்தமல்லி இலைகளை சாறு அல்லது கஷாயமாக உட்கொள்ளலாம். இதனால் மூட்டு வலியிலிருந்து உடனடி நிவாரணம் (Joint Pain Remedies) கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கருவளையங்கள் மாயமாய் மறைய... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ