வைட்டமின் டி நிறைந்த உணவுகள்: ஒவ்வொரு வைட்டமின் உடலுக்கு மிகவும் தேவையானது. மற்ற வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானதைப் போலவே, வைட்டமின் டி ஊட்டசத்தும் உடலுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
வைட்டமின் டி குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
துரித உணவு மற்றும் தவறான வாழ்க்கை முறையால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுதாக உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். சூரிய ஒளி வைட்டமின் டிக்கான முக்கிய ஆதாரம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் சூரிய ஒளியைத் தவிர சிறந்த ஆதாரங்களாகக் கருதப்படும் சில உணவுப் பொருட்கள் உள்ளன.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்
உடல் எப்போதும் சோர்வாக இருக்கும்
எலும்பு மற்றும் முதுகு வலி
ஆறாத காயம்
மன அழுத்தம்
முடி உதிர்தல்
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
முட்டை: முட்டைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் புரதம், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளன. வைட்டமின் டி குறைபாட்டை நீக்க, முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால், நல்ல பலனை பெறலாம்.
ALSO READ | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?
பால்: குழந்தை பருவத்திலிருந்தே பால் மிகவும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிக்க பால் உதவுகிறது.
கீரை: கீரையில் புரதம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டுடன் பல ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
பன்னீர் : பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவாகும். இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து உட்கொண்டால், பல நோய்களைத் தவிர்க்கலாம்.
சோயாபீன்: சோயாபீனில் புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, வைட்டமின் பி, துத்தநாகம், ஃபோலேட், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR