உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல், வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகளை, எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அதனை இன்றே மாற்றிக் கொள்ளுங்கள். பொதுவாகவே எந்த ஒரு ஊட்டச்சத்தும் அளவிற்கு அதிகமாக ஆனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். உணவின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்கள் சாப்பிடுவதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
வைட்டமின் சப்ளிமெண்ட் மாத்திரைகள்
அளவிற்கு அதிகமாக வைட்டமின் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொண்டால், இதய நரம்புகளில் அடைப்புகள் ஏற்படும் என்றும், கல்லீரல் சிறுநீரகாமல் பாதிக்கப்படும் என்றும், மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின் மூலம், பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிகப்படியான கால்சியம் மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து
அதிக அளவிலான கால்சியம் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால், நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதோடு, சிறுநீரக கற்களை இருக்கும் அபாயமும் (Health Tips) உள்ளது. அதோடு அளவுக்கு அதிகமாக கால்சியம் எலும்புகளில் சேரும்போது, எலும்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இருவிதமான சப்ளிமெண்ட்களை ஒன்றாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்
சில சமயங்களில் இரு விதமான, சப்ளிமெண்ட் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக் கொள்வதால், ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம். உதாரணத்திற்கு இரும்பு சத்து மாத்திரைகளையும், கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, கால்சியம் சத்து மாத்திரைகள், இரும்பு சத்து உடலில் உறிஞ்சப்படும் ஆற்றலை பாதிக்கும்.
அதிக அளவிலான மெக்னீசியம் சப்ளிமெண்ட் மாத்திரைகள்
மெக்னீசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், விக்னேஷியா மாத்திரைகளை சாப்பிடும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை என்று எடுத்துக் கொள்வது மிக ஆபத்து.
மேலும் படிக்க | குண்டு குண்டா இருக்குற தொப்பையை 15 நாட்களில் குறைக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்
அளவுக்கு அதிகமான சப்ளிமெண்டால் ஏற்படும் ரத்தம் மெலிதல் பிரச்சனை
சில வைட்டமின் சப்ளிமெண்ட் மாத்திரைகள், ரத்தத்தை மெலிதாக்கும் தன்மை கொண்டவை. இவை அளவிற்கு அதிகமாகும் போது, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். எனவே மருத்துவர் உடன் கலந்தாலோசித்து பின்னரே, வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
அளவிற்கு அதிக பயோடின் ஏற்படுத்தும் பாதிப்புகள்
சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருக்கும் போது, கூந்தல் ஆரோக்கியத்திற்காக, பயோட்டின் சப்ளிமென்ட் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இதுவும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் எது ஒரு காரணத்திற்காக, ரத்த பரிசோதனை செய்ய நேர்ந்தால், அதன் முடிவுகளில் எது பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் ரத்த பரிசோதனை அறிக்கை முடிவுகள் உங்கள் உண்மை உடல் நிலையை பிரதிபலிக்காது.
மல்டி வைட்டமின் மாத்திரைகளால் ஏற்படும் பாதிப்புகள்
மல்டி வைட்டமின் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தும். அது நோய் எதிர்ப்பு சக்தியை வாய்ப்புள்ளது. எனவே மல்டி வைட்டமின் மாத்திரைகளை பணத்தைவிடாமல், நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிப்பது எப்போதுமே நல்லது.
மேலும் படிக்க | 40 வயதுக்கு பின்னரும் நச்சுனு வாழ... இந்த பழத்தின் ஜூஸை அப்பப்ப குடிங்க!
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ