எடை இழப்பு குறிப்புகள்: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் அவ்வளவு முக்கியம்தான். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிகரிக்கும் எடையைக் குறைக்க நமது உணவு முறையை மாற்றுவது ஒரு நல்ல வழியாகத் தெரிகிறது. ஏனெனில் முறையான உணவு நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உணவே உடலையும் அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக, நாம் காலை வேளையில் உட்கொள்ளும் உணவின் தாக்கம் நாள் முழுவதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் முறையான உணவை உட்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஆனால், காலை வேளைகளில் தவறான உணவை உட்கொண்டால், நாள் முழுதும் மந்தமாக கழியும். இது மட்டுமின்றி, நாம் காலையில் உண்ணும் உணவு நமது உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
காலையில் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதால், உடல் எடையும் குறைவதோடு, வயிறு நிரம்பிய உணர்வும் ஏற்படும். இவற்றால் உடல் ஆரோக்கியம் சீராவதோடு, நமக்கு நாள் முழுவதற்குமான புத்துணர்ச்சியும் கிடைக்கும். அத்தகைய சிறந்த காலை உனவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இட்லி / தோசை
காலை உணவுக்கு இட்சி மிக நல்ல சிற்றுண்ட்டியாக கருதப்படுகின்றது. இது மிகவும் லேசான காலை உணவாகும். உடலுக்கு எந்த கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாமல், பல வித சத்துக்களையும் இது அளிக்கின்றது. தோசையும் காலை உணவுக்கு சிறந்தது. இவற்றுடன் காய்கறிகள் அதிகமாக உள்ள சாம்பார் / கொத்சு ஆகியவற்றை சேர்த்து உட்கொண்டால் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் நிறைந்த ஒரு பரிபூரண காலை உணவாக இது இருக்கும்.
மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்
அவல்
மிக லேசான காலை உணவை விரும்புபவர்களுக்கு அவல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதை காய்கறிகளுடன் சமைத்து உப்புமாவாக உட்கொள்ளலாம். அல்லது பாலில் ஊற வைத்தும் இதை உட்கொள்ளலாம். அவல் மிக லேசானது, ஆனால் வயிற்றை முழுமையாக நிரப்புகிறது. இதன் காரணமாக, செரிமானமும் சிறப்பாக இருக்கும். தினமும் காலை உணவில் அவல் சாப்பிட்டால், குடல் ஆரோக்கியம் மற்றும் எடை அதிகரிப்பு பிரச்சனையும் குறைகிறது.
முட்டைகள்
உடல் எடையை குறைக்க புரதம் நிறைந்த முட்டைகளை காலை உணவாகவும் சாப்பிடலாம். முட்டை ஆரோக்கியமானது மட்டுமல்ல, சுவையானதும் கூட. முட்டை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன, மேலும் அதிக புரதம் கிடைக்கிறது. இது எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலை உணவாக முட்டை ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்.
கோதுமை ரவை கஞ்சி
கோதுமை ரவை உப்புமா அல்லது கோதுமை ரவை கஞ்சி ஒரு சத்தான காலை உணவாக கருதப்படுகின்றது. அதில் உங்களுக்கு விருப்பமான சில காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையும் கூடுகிறது. மேலும் ஆரோக்கியத்துக்கும் இது மிகுந்த நன்மை பயக்கிறது. கோதுமை ரவை உப்புமா அல்லது கஞ்சியை காலை உணவாக உட்கொள்வதால் வயிறு நிரம்பி இருக்கிறது, செரிமான பிரச்சனை சீராகிறது. முக்கியமாக இந்த காலை உணவு உடல் பருமனை குறைக்க உதவுகின்றது.
முளை கட்டிய பயறுகள்
எடையைக் குறைக்க காலை வேளையில் லேசான உணவைச் சாப்பிட விரும்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் முளை கட்டிய பயறுகளை உட்கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை உடல் எடைய குறைக்க பெரிதும் உதவுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ