சுகர் உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த இலை சாப்பிடுங்க

Sadabahar Leaves For Diabetes Patients: மடகாஸ்கர் பெரிவிங்கிள் செடியை, நித்தியக் கல்யாணி என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த மூலிகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 25, 2023, 03:47 PM IST
  • பூரண ஆரோக்கியம் தரும் நித்திய கல்யாணி.
  • இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம்.
  • நித்ய கல்யாணி மருத்துவ பயன்கள்.
சுகர் உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த இலை சாப்பிடுங்க title=

நீரிழிவு நோயாளிகளுக்கு நித்ய கல்யாணி இலைகள்: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தவறான உணவுமுறை காரணத்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து, நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று நித்ய கல்யாணி. நித்ய கல்யாணி ஒரு பிரபலமான ஆயுர்வேத மூலிகையாகும், இது பல நூற்றாண்டுகளாக நீரிழிவு உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே சர்க்கரை அளவைக் குறைக்க நித்ய கல்யாணியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்...

நீரிழிவு நோயாளிகளுக்கு நித்ய கல்யாணி எப்படி பயனுள்ளதாக இருக்கும்?
அதிக அளவு சர்க்கரை உடலின் பல்வேறு உறுப்புகளை சேதப்படுத்துகிறது மற்றும் இவை சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு மற்றும் குருட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. நித்ய கல்யாணியில் 'ஆல்கலாய்டுகள்' மற்றும் 'டானின்கள்' ஆகிய இரண்டு செயலில் உள்ள சேர்மங்கள் உள்ளன, அவை இரத்தச் சர்க்கரைக் குறைக்க உதவுகிறது. அதாவது, அவை இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். இந்த மூலிகையில் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஆபத்தை குறைக்க அவை உதவுவதற்கு இதுவே காரணம்.

மேலும் படிக்க | அடிவயிற்று சதை சட்டுனு குறையுமா? காலை உணவில் இதை சாப்பிடாதீங்க

புற்று நோய் தீர்க்கும் நித்திய கல்யாணி
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, நித்திய கல்யாணி பல பண்புகளையும் கொண்டுள்ளது. தொண்டை புண், மலேரியா மற்றும் லுகேமியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். அதேபோல் நித்திய கல்யாணியில் புற்றுநோய் செல்கள் பிறக்காமல் தடுக்கும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.

உணவில் நித்திய கல்யாணியை எப்படி சேர்ப்பது-

1. தேநீர் வடிவில்- நீரிழிவு நோயாளிகள் ஒரு கைப்பிடி புதிய அல்லது உலர்ந்த நித்திய கல்யாணி இலைகளை 10 முதல் 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த டீ வேலை செய்யும்.

2. நித்திய கல்யாணி இலைகளின் தூள்- நித்திய கல்யாணி இலைகளின் காய்ந்த இலைகளை அரைத்து நன்றாகப் பொடி செய்து, அதை ஏதேனும் உணவு அல்லது பானத்தில் கலந்து குடிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் கொய்யாபழம்! இந்த முறையில் சாப்பிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News