செரிமானத்தை மேம்படுத்துவது எப்படி: செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செரிமான பிரச்சனையால் போராடுகிறார்கள். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இதில் நொறுக்குத் தீனிகளின் உட்கொள்ளல், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவை அனைத்தும் அடங்கும்.
ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளும் செரிமான பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அத்தனை கஷ்டம் அல்ல. பல இயற்கை வழிகளின் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். ஆயுர்வேதம் செரிமானத்தை குணப்படுத்த பல வழிகளைக் கொடுத்துள்ளது. அவை முயற்சி செய்ய மிகவும் எளிதானவை. செரிமானத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
1. குளிர்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது:
கோடையில் குளிர்ந்த நீரை அனைவரும் குடிக்க விரும்புவார்கள். ஆனால் நம் வயிறு சூடான பொருட்களை அதிகம் விரும்புகிறது. எனவே குளிர் பானங்கள், குளிர்ந்த தண்ணீர் மற்றும் குளிர்ந்த உணவு ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள். வெதுவெதுப்பான அல்லது சூடான உணவு மற்றும் பானங்களை ஜீரணிக்க குறைந்த நேரம் எடுக்கும். மேலும் இது செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | இந்த மரப்பட்டை சுகரை கட்டுக்குள் வைத்திருக்கும், இன்சுலின் பற்றாக்குறை இருக்காது
2. ஆழமாக சுவாசிக்கவும்:
உணவை உண்ணும் முன் 5 முறை ஆழமாக சுவாசிக்கவும். இது உங்கள் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்த உதவும். பாராசிம்பேடிக் நரம்பு மண்டலம் என்பது செரிமான அமைப்பு மற்றும் மூளையின் செரிமானம் மற்றும் ஓய்வின் செயல்முறையாகும். இதனால், சாப்பிட்டு செரிமானம் ஆவதற்கு முன்பு நமது மூளை சரியாக வேலை செய்கிறது.
3. அதிக உடல் இயக்கம் அவசியம்:
உங்கள் உடல் செயல்பாடு குறைவாக இருந்தால், உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தினமும் 100 முதல் 200 படிகள் நடப்பதும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதற்கு ஷட்பாவளி என்று பெயர். இது தவிர, தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது உங்கள் பசியை மேம்படுத்தி செரிமானத்தை சரி செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அதிக சீரகம் ஆபத்து!! அச்சப்படுத்தும் சீரகத்தின் பக்க விளைவுகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ