Weight Loss: உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கணுமா? பப்பாளி பழத்தை இப்படி சாப்பிடுங்க

How To Lose Weight With Papaya: உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மிகவும் உதவியாக இருக்கும். இது உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் பல ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 28, 2022, 08:31 AM IST
  • பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளன.
  • இது எடையைக் குறைக்க உதவுகிறது. ஆகையால் நீங்கள் தொப்பை கொழுப்பால் அவதியில் இருந்தால், பப்பாளி உங்களுக்கு உதவக்கூடும்.
  • எடை இழப்புக்கு பப்பாளியை நீங்கள் எப்படி உட்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Weight Loss: உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கணுமா? பப்பாளி பழத்தை இப்படி சாப்பிடுங்க title=

பப்பாளியின் உதவியுடன் எடையை குறைப்பது எப்படி: உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்கிறார்கள். அதன் பிறகும் பலருக்கு அவர்கள் விரும்பிய எடையை பெற முடிவதில்லை. பெரும்பாலான மக்கள் எடையைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியத்தை நம்புகிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் அவதிப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மிகவும் உதவியாக இருக்கும். இது உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் பல ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உங்கள் உணவு எளிதில் ஜீரணமாகும். 

மறுபுறம், பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளன. இது எடையைக் குறைக்க உதவுகிறது. ஆகையால் நீங்கள் தொப்பை கொழுப்பால் அவதியில் இருந்தால், பப்பாளி உங்களுக்கு உதவக்கூடும். எடை இழப்புக்கு பப்பாளியை நீங்கள் எப்படி உட்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

தொப்பையை குறைக்க, பப்பாளியை இப்படி சாப்பிடுங்கள்:

ஃப்ரூட் யோகர்ட் (Fruit Yogurt) 

வயிற்றில் ஏகப்பட்ட கொழுப்பு சேர்ந்து அதனால் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், பப்பாளியை நறுக்கி தயிரில் சேர்த்து காலை உணவில் சாப்பிடலாம். இதில் மேலும் சில பழங்களையும் சேர்க்கலாம். இதில் ஊறவைத்த உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதன் மூலம் கொழுப்பு நிறைந்த மற்ற உணவுகளை அதிகமாக உண்பதை நீங்கள் எளிதில் தவிர்க்கலாம். 

மேலும் படிக்க | குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க இந்த ஸ்னாக்ஸ் உதவும் 

பால் மற்றும் பப்பாளி: 

நீங்கள் காலை உணவை ஹெவியாக உட்கொள்ள விரும்பினால், இதற்காக நீங்கள் வேறு எந்த ஆரோக்கியமற்ற உணவையும் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கிளாஸ் கிரீம் பால் மற்றும் பப்பாளி சாப்பிட்டால் போதும். இதன் மூலம் புரதச்சத்தும் கிடைத்து பல மணி நேரம் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வும் இருக்கும். ஆகையால், நீங்கள் உங்கள் வயிற்றுத் தொப்பையை குறைக்க விரும்பினால், காலை உணவில் பால் மற்றும் பப்பாளி சாப்பிடலாம்.

பப்பாளி சாட்:

சிலருக்கு பப்பாளி பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் பப்பாளி சாட் செய்தும் சாப்பிடலாம். இதற்கு, பப்பாளியை துண்டுகளாக வெட்டி, அதன் மீது கருப்பு உப்பு, கருப்பு மிளகு தூள் தூவி உட்கொள்ள வேண்டும். இது மிகவும் லைட்டாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Garlic Side Effects: அளவிற்கு மிஞ்சிய பூண்டு கல்லீரலை பாதிக்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News