உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தை உயரமாக வளர இதை செய்தால் போதும்

Grow Taller: உயரம் என்பது மரபணுவை சார்ந்ததாக இருப்பதால், பெரும்பாலான குழந்தைகளின் உயரம் குறைவாக இருக்கிறது. ஆனால் உணவுகளால் இந்த நிலையை சற்று மாற்றலாம். குழதைகளின் உயரத்தை அதிகரிக்க உதவ ஊக்கம் கொடுக்கும் உணவுகள்...     

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2022, 01:19 PM IST
  • குழந்தைகளின் உயரத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்
  • உயரமானவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்
  • அழகு, ஆரோக்கியம் என உணவே அனைத்திற்கு அடிப்படை...
உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தை உயரமாக வளர இதை செய்தால் போதும் title=

வளரும் வயதில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் உணவின் மூலமே கிடைக்கிறது. எனவே, குழந்தைகளின் உணவு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயரம் குறைவாக இருப்பது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கவலை தரும் விஷயமாக இருப்பதால், பலருக்கு கவலை இருக்கிறது. ஒரு குழந்தையின் உயரம் என்பது, குடும்ப மரபியல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு பழக்கங்கள் மூலம் இந்த பிரச்சனையை ஓரளவு சரி செய்ய முடியும். மரபணுவைத் தவிர, ஊட்டச்சத்துக் காரணிகளும் உடல் வளர்ச்சியில் ஒரு பெரிய காரணியாக உள்ளது. சரியான ஊட்டச்சத்து மூலம் குழந்தை தனது அதிகபட்ச உயரத்தை அடையலாம். புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன, எலும்புகளின் வளர்ச்சியும் திண்மையுமே உயரமாக வளர முக்கியமானது.

கோழி
கோழிக்கறியில் புரதச்சத்து நிறைந்துள்ளது என்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல கூறுகள் அடங்கியுள்ளன. ஆரோக்கியமான உணவுக்கு சிக்கன் அருமையான தேர்வாகும். குறிப்பாக உயரத்தை அதிகரிக்க தேவையான, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி12 இதில் அதிகம் உள்ளது. இதில் டாரைன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது எலும்பு வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை சீராக்க உதவுகிறது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

பீன்ஸ்
புரதம் நிறைந்தபீன்ஸ், புரோட்டீன் அதிகம் கொண்ட முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது குழந்தைகளில் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி காரணியை அதிகரிக்கும் பண்பு கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உயரமாக வளர மற்றொரு முக்கிய காரணியான இரும்புச்சத்தும் இதில் நிறைந்துள்ளது.

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் குழந்தையின் உயரம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். கனிமங்களின் சரியான கலவைகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அதேபோல, கீரைகளில் வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை போதுமான அளவு இருப்பதால் தினசரி உணவில் கீரை சேர்த்துக் கொள்வது அவசியம். 

பாதாம்
பாதாம் பருப்பில் உயரமாக வளர தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு மற்றும் பலவிதமான நன்மை பயக்கும் கொழுப்புகளில் அதிகமான அளவு பாதாமில் உள்ளது. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினும் அதிக அளவில் உள்ளது, இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இந்த முக்கிய வைட்டமின் குறைபாடு இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சி மட்டுப்பட்டுவிடும். பாதாம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கும்.  

குயினோவா
குயினோவா அதிக சத்துக்களைக் கொண்ட விதையாகும், இது மற்ற தானியங்களுக்கு மாற்றாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு முழுமையான புரதமாகக் கருதப்படும் சில தாவர அடிப்படையிலான உணவுகளில் ஒன்றாகும், உடலுக்குத் தேவையான ஒன்பது அமினோ அமிலங்களும் கொண்டது குயினோவா என்பதால், குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை மறவாதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News