Liver Diseases: கல்லீரல் நமது உடலின் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டுவது முதல் உடலின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து பிரிப்பது வரை பல வகையில் முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. கூடுதலாக, இது உணவை ஜீரணிக்கும் பித்த புரதங்களின் உற்பத்தி, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. இந்நிலையில், சிறிதளவு கவனக்குறைவும் கல்லீரலில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும். எந்தவொரு நோயையும் கண்டறிய, முதலில் நாம் அதன் அறிகுறிகள் மீது கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமாகும்.
கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் கல்லீரல் பாதிப்பின் அபாயத்தை உணர்த்தும் வகையில், கல்லீரலிலும் பல வகையான அறிகுறிகள் காணப்படுகின்றன. கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை உணர்த்தும் வகையில் அறிகுறிகள் மூலம் நம் உடல் நமக்கு எச்சரிக்கை கொடுக்கத் தொடங்குகின்றன. வயிறு வீக்கம், தோலில் அரிப்பு, கால்களில் வீக்கம் அல்லது வாந்தி ஆகியவை பொதுவான கல்லீரல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. ஆனால் இவை தவிர, உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டால், அதுவும் கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் உறக்கத்தின் போது உணரப்படும் சில அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறிகள் (Symptoms of Liver Diseases)
தூக்கமின்மை
தூக்கமின்மை (sleep disorder) பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளாது. பல சமயங்களில், தூங்கும் போது, இரவில் பல முறை எழுகிறோம். அப்படி எழுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இது தீவிர கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும்.
சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
சிறுநீரின் நிறம் மற்றும் வாசனையில் மாற்றம் (Change in Urine Colour) கல்லீரல் பிரச்சனைகளையும் குறிக்கிறது. இதுபோன்ற அறிகுறிகளையும் நீங்கள் கண்டால், தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பை கரைய... கை கொடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!
உடலில் அரிப்பு
இரவில் தூங்கும் போது உங்கள் உடலில் அரிப்பு (Itching) ஏற்பட்டால், அதை சாதாரணமாக கருத வேண்டாம். ஏனென்றால் அடிக்கடி வரும், சாதாரணமாகத் தோன்றும் இந்த அரிப்பு கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
வீக்கம்
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளால் சில சமயங்களில் கால், கணுக்கால் அல்லது கல்லீரலைச் சுற்றி வீக்கம் (Swelling) அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் வீக்கம் அதிகரித்தால், அந்தப் பகுதியிலும் வலியும் ஏற்படும். இப்படி வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால், உடனடியாக கல்லீரல் பரிசோதனை செய்துகொள்வது நல்லதாகும்.
- கல்லீரல் நோயின் பிற அறிகுறிகள்
- மஞ்சள் தோல் மற்றும் கண்கள்
- பசியின்மை மற்றும் வாந்தி
- வயிற்று வலி மற்றும் வீக்கம்சோர்வு மற்றும் பலவீனம்
மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை தவிர, மேலும் கீழ்கண்ட சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
1. ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
2. தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
3. எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
4. ஹெபடைடிஸ் தடுப்பூசி போடுங்கள்.
5. மது அருந்துவதைக் குறைக்கவும் அல்லது நிறுத்தவும்.
6. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









