நமது உணவில் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E எனபல்வேறு சத்துகள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை சமையலில் சிறிதளவு பயன்படுத்தினாலும், அது மிகவும் நல்ல மணத்தை கொடுப்பதோடு, ஒட்டுமொத்த ஊட்டச்சத்தையும் மேம்படுத்துகிறது. பிரபலமான மூலிகையாகப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையை பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் உண்ணலாம், உணவில் தாளிப்புக்கும் பயன்படுத்தலாம்.
ஆனால், கறிவேப்பிலையின் சாறை பருகுவதும், கறிவேப்பிலையை தண்ணீரில் ஊறவைத்து அதன் தண்ணீரைப் பருகுவதுவும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதால், கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துக் கொண்டால் இந்த நீராகாரத்தை தினசரி பருகுவதை வழக்கமாக்கிக் கொள்வீர்கள்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளுக்கு அலர்ட்! இந்த 10 காய்கறிகளை வாரத்தில 2 நாளாவது சேர்த்துக்கோங்க
டிடாக்ஸ் பானங்கள் என்று சொல்லப்படும், ஆரோக்கியமான பானங்கள் உடலின் நச்சுத்தன்மையை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, அதில் முதலிடம் பெறுவது கறிவேப்பிலை ஜூஸ்.
எனவே, கறிவேப்பிலையின் ஆரோக்கிய பண்புகள் கொண்ட பானம் உங்கள் நாளைத் தொடங்க ஆரோக்கியமான பானமாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளன. அதிலும், கறிவேப்பிலையை மூலிகை என்று சொல்கிறோம். வழக்கமாக மூலிகையை அப்படியே இயற்கையாக பயன்படுத்துவது, சத்துக்கள் முழுமையாக உடலுக்கு வந்து சேர உதவும்.
மேலும் படிக்க | Diabetes Diet: சுகர் லெவலை கட்டுப்படுத்த... வெள்ளரியை இப்படி சாப்பிட்டால் போதும்
செரிமானத்திற்கு கறிவேப்பிலை ஜூஸ்
கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உட்பட பல அம்சங்கள், நோய்கள் ஏற்படாமல் தடுத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றனர்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை.
கறிவேப்பிலை சாறை தினசரி பருகுவது, இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகலை குறைக்கும்.
இரும்புசத்து அதிகம் கொண்டுள்ள கறிவேப்பிலையின் பண்பானது, ரத்த விருத்திக்கு உதவும். உடலின் உறுதியை பாதுகாக்கும். கறிவேப்பிலையில் மலமிளக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. அதோடு கறிவேப்பிலையின் மனம், மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு
கறிவேப்பிலை என்றும் கருவேப்பிலை என்றும் அழைக்கப்படும் இந்த மூலிகையின் பெயரிலேயே இருக்கும் ‘கரு’ தலைமுடியை கருமையாக வளரவைக்கும். இந்த ஜூஸை குடிக்கும் பொழுது உங்கள் உடம்புக்கு அதிகப்படியான இரும்பு சத்துகள் கிடைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், காலையில் இந்த பானத்தை பருகினால், உடல் எடை சட்டென்று குறைந்து விடும்.
முதியவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் பிரச்சனையாக மாறியிருக்கும் தலைமுடியை வளர்ப்பத்தில் கறிவேப்பிலை நல்ல பங்கு வகிக்கிறது. தலைமுடி நரைப்பதை தாமதப்படுத்தவும், முடி ஆரோக்கியமாக அடர்த்தியாக வளரவும் கறிவேப்பிலை உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ