வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் நன்மைகளைத் தருவது என்றாலும், பொதுவாக வாழைப்பழம் மட்டுமே நேரடியாக அப்படியே உண்ணும் உணவாக உள்ளது என்பதால் வாழைப்பழம் என்பது மிகவும் பிரபலமானது. ஆனால், வாழைக்காய் பழுக்காமல் காய்வெட்டாக இருக்கும்போது சமைத்து சாப்பிட்டால், அது வாழைப்பழத்தை விட உடலுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரியாது.
வாழையின் ஊட்டச்சத்துக்கள்
வாழைப்பழம் மிகவும் சத்தான பழமாகும், ஆனால் விலை குறைவானது. இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தின் ஊட்டச்சத்துக்களுக்கும், வாழைக்காயின் ஊட்டச்சத்துக்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
காயாக இருக்கும்போது இருக்கும் ஊட்டச்சத்து மதிப்புகளில் சில, பழுத்த பழமாக அதாவது வாழைப்பழமாக மாறும்போது கூடுகிறது என்றால், சில ஊட்டச்சத்துக்களின் மதிப்பு குறைகிறது. இது சற்று விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் இது தான் உண்மை.
வாழைப்பழத்தை அப்படியே பழமாக சாப்பிடலாம். ஆனால், காயை பொரியல், பஜ்ஜி, சிப்ஸ் என உருமாற்றித் தான் உண்ண வேண்டும். அப்போது அதன் ஊட்டச்சத்துக்களில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஆனால், வாழைப்பழத்தை அப்படியே உண்பதால் அதன் ஊட்டச்சத்துக்கள் மாறுவதில்லை.
மேலும் படிக்க | புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் வாழைக்காய்: வாழவைக்கும் வாழை
காய் - பழம்: ஊட்டச்சத்துகள்
ஆனால், சாதாரணமாக உண்ணும் பக்குவத்தில் இருக்கும் வாழைப்பழத்திற்கும் நன்கு கனிந்த வாழைப்பழத்திற்கும் உள்ள ஊட்டச்சத்துக்கள் சற்று வித்தியாசப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, ஒரே தாவரத்தில் இருந்து கிடைத்தாலும், அதிலிருந்து கிடைக்கும் பொருட்களின் (உதாரணம்: இலை, காய், கனி, பூ, பட்டை) ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் வித்தியாசப்படும் என்பது புரிந்துக் கொள்ள கூடிய ஒன்று.
வாழைக்காயின் மருத்துவ பண்புகள்
வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்ச் கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. செரிமான மண்டலத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வாழைக்காய்
வாழைக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பினாலிக்ஸ் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, இதனால் புற்றுநோய் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
நீரிழிவு நோய்க்கு வாழைக்காய்
பழுத்த வாழைப்பழங்களை விட குறைவான சர்க்கரை சத்தைக் கொண்டிருக்கும் வாழைக்காயில், இனிப்பு குறைவாக இருக்கும். அதோடு, வாழைக்காயில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் உள்ளது, இது ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். வாழைக்காயில் கிளைசெமிக் இன்டெக்ஸ் 30 என்ற அளவில் உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஜூஸ்கள் சூப்பர் டானிக்! சர்வதேச மருத்துவர்களின் பரிந்துரை
இதய ஆரோக்கியத்திற்கு வாழைக்காய்
இதய ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது மற்றும் இதய தாளத்தை ஒழுங்குபடுத்துகிறது.
உடல் எடையை குறைக்கும் வாழைக்காய்
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெற்றி பெற வேண்டுமென்றால், வாழைக்காயை சாப்பிடலாம். ஏனென்றால், நார்ச்சத்து அதிகம் கொண்ட வாழைக்காயில், கலோரிகள் குறைவாக உள்ளதால் பசியை குறைத்து குறைவாக சாப்பிட வைக்கிறது. உணவு அளவு குறையத் தொடங்கினால், உடல் எடையும் படிப்படியாக குறையத் தொடங்குகிறது.
நோய்களிலிருந்து பாதுகாக்கும் வாழைக்காய்
வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள வாழைக்காயை சமைத்து சாப்பிடும்போது, எலும்பிற்கு போதிய பலம் ஏற்படும். இதனால், மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து விடுபடலாம்.
உணர்வுகளை கட்டுப்படுத்தும் வாழைக்காய்
வாழைக்காயில் உள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் மூளையில் நடக்கும் ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கிறாது. எனவே, வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உணர்ச்சிகரமான மன நிலை உண்டாவதைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.
மேலும் படிக்க | உலகிலேயே முட்டை விலை அதிகமான நாடு எது தெரியுமா? அதிர வைக்கும் விலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ