Weight Loss Tips: ஒருவருக்கு எடை ஏறிவிட்டால், பின்னர் அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது. அதுவும் குறிப்பாக, குளிர் காலங்களில் மக்களின் எடை வேகமாக அதிகரிக்கிறது. அதேபோல் அதிக உடல் செயல்பாடு இல்லாததாலும், இந்த பருவ நிலையில் அதிக பசி எடுக்கும் என்பதாலும், குளிர் காலத்தில் தொப்பையில் சேரும் கொழுப்பும் அதிகமாக உள்ளது. ஆகையால் குளிர் காலத்தில் எடையை குறைப்பது மிக கடினமான ஒரு சவாலாகவே உள்ளது.
குளிர்காலத்தில் எடை இழப்பு (Weight Loss in Winters)
குளிர் காலத்தில் எடையை குறைப்பது கடினம் என்றாலும், சில குறிப்பிட உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் அதை செய்யலாம். வழக்கமாக இந்த பருவ நிலையில் நாம் விரும்பி உட்கொள்ளும் சில உணவுகளை கொண்டே நமது தொப்பை கொழுப்பையும் (Belly Fat) உடல் எடையையும் குறைக்கலாம். குறிப்பாக சில சூடான பானங்கள் (Hot Drinks) இந்த மியற்சியில் மிக உதவியாக இருக்கும். இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். பொதுவாக குளிர்காலத்தில் இது மந்தமாகிவிடுகிறது. இந்த பானங்கள் அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
குளிர்காலத்தில் தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் 5 சூடான பானங்கள் பற்றி இங்கே காணலாம்
கிரீன் டீ:
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு பானம். க்ரீன் டீயில் (Green Tea) ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மெலும் இது ஆரோக்கியமற்ற உணவு பசியைக் குறைக்கிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீர்:
அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar) குடிப்பதும் உங்கள் நாளைத் தொடங்க ஆரோக்கியமான வழியாகும். இது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சள் பால்:
இது பல நாட்களாக பயன்படுத்தப்படும் பழமையான எடை இழப்பு (Weight Loss) வகைகளில் ஒன்றாகும். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக ஏற்றது. இதில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு உதவும். மஞ்சள் பால் (Turmeric Milk) எடை இழப்பை ஊக்குவிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்:
எளிதாக வீட்டில் தயாரிக்கப்படும் பானம் இது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை (Lemon Juice) பிழிந்து குடிப்பது எடை இழப்புக்கு பெரிய வகையில் உதவும். இதில் வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை கலோரிகளை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன.
ஹெர்பல் டீஸ்:
ஹெர்பல் டீ (Heral Tea) எடை குறைக்க உதவும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் இது அதிகரிக்கிறது. மேலும் ஹெர்பல் டீ கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் நல்லது. இது வயிற்று கொழுப்பை வேகமாக குறைக்கவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Home Remedy: மலச்சிக்கலுக்கே சிக்கல் கொடுக்கும் மருத்துவ மூலிகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ