165 to 55- நான்கு ஆண்டுகளில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன தொழில் அதிபர்..!

பிரபல உணவு ஆர்டர் செய்யும் தளமான ஜொமேட்டோவின் தலைமை செயல் அதிகாரி தனது உடல் எடை மாற்றத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 2, 2023, 09:51 AM IST
  • ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயலாளர் தீபேந்தர் கோயல்.
  • 4 ஆண்டுகளில் உடல் எடையை அதிகமாக குறைத்துள்ளார்.
  • இது எப்படி நடந்தது..?
165 to 55- நான்கு ஆண்டுகளில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன தொழில் அதிபர்..! title=

இந்தியா முழுவதும் உணவு ஆர்டர் செய்யும் தளங்களில் முதன்மையான ஒன்றாக விளங்குவது, Zomato. இந்த தளத்தின் முதன்மை செயலாளர் தீபேந்தர் கோயல் தனது உடல் எடை மாற்றம் குறித்த பதிவினை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவு வைரலாகி வருகிறது. 

ஜொமேட்டோ நிறுவன தலைமை செயலாளர்:

ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்குபவர், தீபேந்தர் கோயல். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இருந்த தோற்றத்தையும் தனது தற்போதிய தோற்றத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இவரது இந்த மாற்றத்தை பார்த்த பலர், “இது எப்படி நடந்தது..? என வாயடைத்து போயுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு 87 கிலோவாக இருந்த இவர், தற்போது 72 கிலோவாக உடல் எடையை குறைத்துள்ளார். 

மேலும் படிக்க | 25 வயதிலேயே நரை முடி பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க

தீப்பேந்தரின் பதிவு..!

“எனது வெயிட் லாஸ் பயணத்தின் சிறு பார்வை..” என தீபேந்தர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் தீபேந்தர், தன் வேலையை போலவே உடல் நலனுக்கும் முன்னுரிமை கொடுக்க தொடங்கியுள்ளார். பெரிதாக எதுவும் டயட், உடற்பயிற்சி எல்லாம் இல்லாமல் கொழுப்பின் அளவை மட்டும் குறைக்கும் அளவிற்கு தினமும் உணவுகளை உட்கொண்டு வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு 87 கிலோவாக இருந்த இவருக்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவு 28 சதவிகிதமாக இருந்துள்ளது. தற்போது 72 கிலோவாக இருக்கும் இவருக்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவு 11.5 சதவிகிதம்தான் உள்ளது. மேலும், உடலில் உள்ள எல்.டி.எல் கொழுப்பின் அளவு இவருக்கு 2019ஆம் ஆண்டில் 165ஆக இருந்துள்ளது, இதனை இவர் சமீபத்தில் 65ஆக குறைத்துள்ளார். 

Zomato

மக்களின் ரியாக்‌ஷன்:

தீபேந்தர் இந்த பதிவை வெளியிட்டதை தொடர்ந்து அதற்கு ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலான ரியாக்‌ஷன்களை கொடுத்துள்ளனர். ஒரு சிலர், “நீங்கள் நிர்வாகம் செய்யும் ஆப்பில் இருந்து நாங்கள் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம், ஆனால் நீங்கள் உங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு ஹெல்தியாக இருக்கிறீர்கள்..” என்று ஆற்றாமையில் கூறுகின்றனர். இன்னும் சிலர், “இந்தியா முழுவதும் உள்ள பயணாளர்கள் உங்களால் குண்டாகிறார்கள் ஆனால் நீங்கள் உங்கள் உடல் எடையை நல்ல உணவுகளாக சாப்பிட்டு குறைத்துள்ளீர்கள்..” என்று கூறியுள்ளனர். 

ஒரு சிலர், “உங்களைப்போல உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் எந்த வகையிலான உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும்..” என்று தமாஷாக கேட்டுள்ளனர். ஒருவர், “உடல் எடையை குறைத்தது எப்படி என்பதை விளாவாரியாக பதிவிடுங்கள்..அப்போதுதான் அது எல்லோருக்கும் உதவும்..” என்று கூறியுள்ளார். 

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்..!

நம்மில் பலரால் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதனால் உடல் எடையை இழக்க முடியாமல் தவிப்போம். இதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. வியர்காமல் உடல் எடையை இழக்க வேண்டும் என்றால் அதற்காக கண்டிப்பாக டயட் இருக்க வேண்டும். நாம் உட்கொள்ள கூடிய கொழுப்பின் அளவை குறைத்து புரதம் மற்றும் நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். எதை சாப்பிட்டாலும் அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை எப்போதுமே பேண வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம் போன்ற விஷயங்களும் உடல் எடை குறப்பிற்கு உதவும். 

மேலும் படிக்க | வழுக்கைப் பிரச்சனைக்கு காரணம் தெரிஞ்சிடுச்சு! சிக்கலை தீர்த்துட்டா, நோ வழுக்கை பாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News