டெலிவரி பாயிலிருந்து IT இன்ஜினியர்: இணையத்தை கலக்கும் வெற்றிக் கதை

லிங்க்ட்இன் தளத்தில் தனது வெற்றி பயணத்தைப் பகிர்ந்துகொண்ட ஷேக் அப்துல் சத்தார், “ஓலா, ஸ்விக்கி, உபெர், ரேபிடோ, ஜொமேட்டோ என கல்லூரி இறுதியாண்டு முதல் எல்லா இடங்களிலும் பணியாற்றினேன்” என குறிப்பிட்டுள்ளார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2022, 02:35 PM IST
டெலிவரி பாயிலிருந்து IT இன்ஜினியர்: இணையத்தை கலக்கும் வெற்றிக் கதை title=

அயராத உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும் என்பது எழுதபப்டாத விதி. ஆந்திராவின் ஷேக் அப்துல் சத்தர், தனது வெற்றி பயணத்தின் மூலம் அதை சரியென நிரூபித்துள்ளார். அந்த இளைஞனின் உறுதியும் மன உறுதியும், பல வருடங்களாக Zomato மற்றும் Swiggy டெலிவரி பாய் ஆக உழைத்து வந்த அவரை பெங்களூரில் IT இன்ஜினியராக ஆவதற்கு வழிவகுத்தது.

சதாரின் வெற்றிக் கதை இணையத்தில் கலக்கியுள்ளது. ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக Zomato, Swiggy மற்றும் Ola போன்ற நிறுவனங்களில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றிய அந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

லிங்க்ட்இனில் தனது தொழில்முறை பயணத்தைப் பகிர்ந்து கொண்ட சதர், “ஓலா, ஸ்விக்கி, உபெர், ராபிடோ, ஜொமேட்டோ... கல்லூரி இறுதியாண்டில் இருந்து பல இடங்களிலும் வேலையில் இருந்தேன்” என்று எழுதினார்.

ஒரு நண்பரின் ஆலோசனையின் பேரில் சத்தர் கோடிங் தொடர்பான படிப்பில் சேர்ந்து பயின்றார். அந்த கால கட்டத்தில், அவர் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டெலிவரி பாய் வேலைக்குச் சென்று வந்தார். காலையில் கல்வி மாலையில் வேலை என கடுமையாக உழைத்தார்.

மேலும் படிக்க |  கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

அவரது குடும்பப் பின்னணி மற்றும் தொழில் பற்றிய கூடுதல் விவரங்களைக் கொட்டிய சத்தர், “என்னால் முடிந்தவரை விரைவில் என் குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனென்றால் என் அப்பா ஒப்பந்தத் தொழிலாளி. அதனால் எங்களிடம் குடும்பம் நடத்த போதுமான பணம் மட்டுமே இருந்தது.  

ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தேன். ஆனால் டெலிவரி பாய் என்பதால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்ற சத்தர் தனது தகவல் தொடர்பு திறன்களை டெலிவரி ஏஜென்டாக தனது பணிக்குக் காரணம் என்று கூறுகிறார்.

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்

தனது திறன்களை சிறிது சிறிதாக மேம்படுத்திய பிறகு, சத்தர் ஒரு வலை பயன்பாட்டை உருவாக்கி வேறு சில திட்டங்களிலும் பணியாற்றினார். பின்னர் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார்.

அடுத்து, அந்த இளைஞன் NxtWave-ல் கோடிங் திறனை வளர்த்துக்கொண்டு, ப்ரோப் இன்பர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Probe42) நிறுவனத்தில் நேர்காணலில் தேர்ச்சி பெற்றார். அங்கு அவர் மென்பொருள் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, சதார் பெருமையுடன் சில மாத சம்பளத்தின் உதவியுடன் தனது பெற்றோரின் கடனை அடைக்க முடிந்தது என்பதை பெருமையாக குறிப்பிடுகிறார். இவரது வெற்றிக் கதை நிச்சயம் பலருக்கு ஊக்கத்தை கொடுப்பதாக இருக்கும் என்பது துளியும் சந்தேகம் இல்லை. 

மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News