பண்டாரா: மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவம்னையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் (SNCU) ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் (Maharashtra) பண்டாராவில் சனிக்கிழமை (ஜனவரி 9) அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த நேரத்தில் வார்டில் இருந்த மொத்தம் 17 குழந்தைகளில், ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
Ten children died in a fire that broke out at Sick Newborn Care Unit (SNCU) of Bhandara District General Hospital at 2 am today. Seven children were rescued from the unit: Pramod Khandate, Civil Surgeon, Bhandara, Maharashtra pic.twitter.com/bTokrNQ28t
— ANI (@ANI) January 9, 2021
ALSO READ: Shocking: பணத்திற்காக ராணுவ ரகசியங்களை விற்ற Ex-Army Man-ஐ கைது செய்தது UP ATS
கடமையில் இருந்த ஒரு செவிலியர் மருத்துவமனையின் பிறந்த குழந்தை பிரிவில் இருந்து புகை வெளியே வருவதைக் கண்டார். உடனடியாக நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களை அவர் எச்சரித்தார். அவர்கள் சில நிமிடங்களில் அங்கு சென்றனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படைத் துறை உடனடியாக அந்த இடத்தை அடைந்து மீட்புப் பணியைத் தொடங்கியது.
தீயணைப்பு படையினர் ஏழு குழந்தைகளை அந்த பிரிவின் 'உள்வரும் வார்டில்' இருந்து மீட்டனர். ஆனால் மற்ற 10 குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை, என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் மின் கம்பிகளில் மின் கசிவு (Short Circuit) காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
புதிதாக பிறந்த 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக தீ விபத்தில் (Fire Accident) உயிர் இழந்திருப்பது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து குறித்த அதிகமான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ: ‘கொரோனா வைரசை தமிழக அரசு கையாண்ட விதம் பாராட்டுக்குரியது': Harsh Vardhan
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR