வாயு புயல் காரணமாக 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!!

வாயு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!!

Last Updated : Jun 12, 2019, 09:02 AM IST
வாயு புயல் காரணமாக 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!!

வாயு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வாயு புயல் காரணமாக தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்கு நோக்கி மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள வாயு, குஜராத்தின் போர் பந்தர் - மஹுவா இடையே நாளை காலை கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல், 24 - 48 மணி நேரத்தில், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ஜ் பகுதிகளை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் முன்னோட்டமாக, வல்சாட் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரூபானி உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

More Stories

Trending News