காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் போர்த்தொடும் கடைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்போரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் கோபால்போரா பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.
#UPDATE Budgam encounter: 2 terrorists have been neutralised by the security forces. Arms and ammunition have been recovered from the site of encounter. The identities and affiliations of the terrorists killed are yet to be identified. A case has been registered. https://t.co/yUUT7afw5Q
— ANI (@ANI) February 13, 2019
இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.