நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த மாணவிக்கு டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார்.
மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஒரு குற்றவாலி இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்த போது, இதில் 4 பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தூக்கு தண்டனையினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது தீர்ப்பளித்தது.
இதனையடுத்து வழக்கின் குற்றவாளிகள் தீர்ப்பினை மறுஆய்வு செய்யுமாறு மீண்டும் நீதிமன்ற உதவியை நாடினர். எனினும் இந்த மறுஆய்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை அளிக்க வேண்டும் என நிர்பயாவின் தயார் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தினை நாடினார். இதுகுறித்து அவர் முன்னதாக தெரிவிக்கையில்., "நான் 7 ஆண்டுகளாக போராடி வருகிறேன். நான் 1 வருடமாக பாட்டியாலா நீதிமன்றத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீதிமன்றம் இன்னும் உரிமையை வழங்கவில்லை. குற்றவாளிகளின் உரிமையை பற்றி பேசும் நீதிமன்றம், எங்களின் உரிமைகளை பேசவது இல்லை. நீதிமன்றம் ஜனவரி 7-ஆம் தேதி வழங்கியுள்ளது. அன்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என எந்த உத்தரவாதமும் இல்லை" என தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரது கூற்றுக்கு மாறாய் இன்று அவருக்கு நியாம் கிடைத்துள்ளது. அவரது மகளின் இறப்பிற்கு பதில் கிடைக்கும் விதமாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவினை இன்று வெளியிட்ட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்., "நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளுக்குமரணதண்டனை ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும். குற்றவாளிகள் தங்கள் சட்ட தீர்வுகளை 14 நாட்களுக்குள் முடிக்கலாம்" என குறிப்பிட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டது. முன்னதாக, 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்க்கு இந்திய தண்டனைச் சட்டம் 376-ஏ-வின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி திகார் ஜெயிலில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ள நிலையில் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 டிசம்பர் 2012 | டெல்லியில் நிர்பயாவை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது |
21 டிசம்பர் 2012 | அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளும் 5 நாட்களுக்குள் பிடிபட்டனர் |
11 மார்ச் 2013 | நிர்பயா வழக்கில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் தற்கொலை செய்து கொண்டார் |
13 செப்டம்பர் 2013 | கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. |
05 மே 2017 | குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது |
6 டிசம்பர் 2019 | கற்பழிப்பு குற்றவாளிகளின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது |
18 டிசம்பர் 2019 | குற்றவாளி அக்ஷய் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது |
7 ஜனவரி 2020 | குற்றவாளிகளின் மரண தண்டனையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உறுதி செய்தது |
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.