தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி பலி

டெல்லியில் தண்டவாள மத்தியில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

Last Updated : May 1, 2019, 11:50 AM IST
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி பலி

டெல்லியில் தண்டவாள மத்தியில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமன், கி‌ஷண், சன்னி தங்கள் உறவினர் ஒருவர் திருமணத்திற்காக டெல்லிக்கு சென்று இருந்தனர். 

டெல்லியில் பானிபட் பூங்கா பகுதியில் அவர்கள் நேற்று மாலை செல்பி எடுத்தபடி இருந்தனர். அந்த பூங்கா பகுதி அருகில் உள்ள ரயில் தண்டவாளத்துக்குள் சென்று செல்போனில் செல்பி எடுத்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது. 

தண்டவாளத்தின் மத்தியில் நின்றபடி அவர்கள் ரயில் வரும் திசையை நோக்கி செல்பி எடுத்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் ரயில் அவர்கள் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர்களது உடல் துண்டு துண்டாக சிதறியது. 

ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

More Stories

Trending News