ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.!!!

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 24, 2022, 12:48 PM IST
  • ஒரே பிரசவத்தில் 4 நான்கு குழந்தைகள்
  • தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்
  • கர்நாடகா தனியார் மருத்துவமனையில் நடந்த ஆச்சரியம்
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.!!! title=

பிரசவத்துக்கு இலவசம் என்று ஆட்டோக்களின் பின்னாளில் எழுதப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் மலையேறிவிட்டது. நவீன யுக பெண்களின் பிரசவங்கள் பெரும்பாலும் வியாபாரங்களில் திளைக்கிறது. முந்தைய தலைமுறைப் பெண்கள் தங்களது எளிமையான மருத்துவமுறை மற்றும் பிரசவ நாள் கதையை அடுத்த தலைமுறை பெண்களிடம் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றனர். அதிலும், பிரசவக் கதைகளில்  இரட்டைக் குழந்தைகளின் பிரசவம் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாதவை. ஆனால், கர்நாடகாவில் ஒரு பெண், டபுள் ட்வின்ஸ் குழந்தைகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதாவது, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்.!

மேலும் படிக்க | விமானத்தில் கதறி அழும் குழந்தையை தூங்க வைக்கும் பணிப்பெண்! வைரல் வீடியோ!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

babyfour

அப்போது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்தன. இதனைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். பின்னர் அந்த குழந்தைகளுக்கும், அல்மாஜிக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதில், ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள்.!

மேலும் படிக்க | ஒரே பிரசவத்தில் 6 பெண்குழந்தை 1 ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

நான்கு குழந்தைகளின் எடை விவரம் :

1.100 கிலோ

1.200 கிலோ

1.300 கிலோ

1.800 கிலோ 

babyfour born

குழந்தைகள் நான்கும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை விந்தையானது.!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News