டெல்லியில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லியின் பீராகரி பகுதியில் இன்று காலை ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated: Jan 2, 2020, 11:15 AM IST
டெல்லியில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லியின் பீராகரி பகுதியில் இன்று காலை ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

டெல்லியின் பீராகரி பகுதியில் பேட்டரி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை  ஒரு பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பேட்டரிகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக தீ விரைவாக பரவியது. இந்த தீ வெடித்து சிதறியதால் தொழிற்சாலை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

தற்போது இடிபாடுகளுக்குள் தீயை அணைக்க  சென்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் சிக்கியுள்ளனர். இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 30க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் மீட்பு நடவடிக்கைக்கு தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில் 43 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.