மனைவியின் பெயரை நாய்க்கு வைத்ததால் பக்கத்து வீட்டு பெண்ணை எரித்த நபர்!

தனது மனைவியின் செல்லப் பெயரை வளர்க்கும் நாய் குட்டிக்கு வைத்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் பக்கத்து வீட்டு பெண்ணை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2021, 05:45 PM IST
மனைவியின் பெயரை நாய்க்கு வைத்ததால் பக்கத்து வீட்டு பெண்ணை எரித்த நபர்! title=

குஜராத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீட்டாபென் சர்வையா(35) என்ற பெண் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இவர் தனக்கு சொந்தமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார்.  அந்த நாய்க்கு அவர் 'சோனு' என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தார்.  இவரின் பக்கத்து வீட்டில் சுரபாய் பர்வத் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவரது மனைவியின் செல்லப் பெயர் 'சோனு'.  இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சர்வையா தனது நாய்க்கு 'சோனு' என்று பெயரிட்டு அழைத்தது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ALSO READ | New Wage Code: இனி வாரத்தில் 3 நாட்கள் வார இறுதி விடுமுறை கிடைக்கும்..!!

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மாலை நேரத்தில் சர்வையா மற்றும் அவரது இளைய மகன் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த சுரபாய் ஆத்திரத்துடன் தன்னுடன் 5 நபர்களை அழைத்துக்கொண்டு அடாவடியாக சர்வ யாவின் வீட்டிற்குள் புகுந்தார்.  அங்கு சென்றவர் தனது மனைவியின் செல்லப் பெயரை எவ்வாறு நாய்க்கு வைக்கலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து சுரபாய் மற்றும் அவருடன் வந்தவர்கள் சர்வையாவை தாக்க முயன்றனர்.  அதிலிருந்து தப்பிக்க முயன்ற சர்வையா சமையலறைக்குள் புகுந்தார், உடனே சுரபாய் மற்றும் உடனிருந்தவர்கள் அவரை பின்தொடர்ந்து சமையலறையில் உள்ள மண்ணெண்ணையை எடுத்து சர்வையாவின் மேலே ஊற்றி தீவைத்துக் கொளுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

fireqfrire

இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் எரிந்துகொண்டிருந்த சர்வையா மீது துணியை போட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  பின்னர் அவரின் கணவருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்தவர் சர்வையாவை தீக்காயங்களுடன் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.  மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே தண்ணீர் பிரச்சினை இருந்ததும், அதிலிருந்தே இருவருக்குள்ளும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

ALSO READ | பாகிஸ்தானின் 20 Youtube சேனல்கள், இணையதளத்தை முடக்கிய மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News