பெண் காங்கிரஸ் தொண்டரை தாக்கிய கட்சியினர்.... வாய் திறப்பாரா பிரியங்கா...!!!

பாலியல் வழக்கை எதிர்கொள்பவருக்கு எதிராக பேசிய காங்கிரஸ் பெண் தொண்டரை, அக்கட்சியினரே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Last Updated : Oct 11, 2020, 04:24 PM IST
  • ‘கற்பழிப்பு’ குற்றசாட்டை எதிர்கொள்ளும் முகுந்த் பாஸ்கர் மணியை கட்சி வேட்பாளராக நிறுத்துவதாக தாரா கூறினார்.
  • மறுபுறம், திரிபாதி, தாராவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டார்.
  • தேசிய மகளிர் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) தலைவர் ரேகா சர்மா, இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
 பெண் காங்கிரஸ் தொண்டரை தாக்கிய கட்சியினர்.... வாய் திறப்பாரா பிரியங்கா...!!! title=

பாலியல் வழக்கை எதிர்கொள்பவருக்கு எதிராக பேசிய காங்கிரஸ் பெண் தொண்டரை, அக்கட்சியினரே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கு ‘கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்’ வேட்பாளராக அறிவிப்பதை எதிர்த்து பேசிய காங்கிரஸ் பெண் தொண்டரை, அக்கட்சியினர்  தாக்கினர். 

 உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் தாரா யாதவ் என்ற பெண் தொண்டர், காங்கிரஸ் தொண்டர்களாலேயே தாக்கப்பட்டார்.

‘கற்பழிப்பு’ குற்றசாட்டை எதிர்கொள்ளும் முகுந்த் பாஸ்கர் மணியை கட்சி  வேட்பாளராக நிறுத்துவதாக தாரா கூறினார். கட்சியின் செயலாளர் சச்சின் நாயக்கிடம், தவறான நபரை தேர்தலில் நிறுத்தினால், கட்சியின் பெயர் கெட்டுவிடும் என அவர் கூறியதையடுத்து, தொண்டர்கள் தன்னை தாக்கியதாக காங்கிரஸ் தொண்டர் தாரா குற்றம் சாட்டினார்.

"ஒரு கற்பழிப்பாளரான முகுந்த் பாஸ்கருக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கு டிக்கெட் வழங்குவதற்கான கட்சியின் முடிவை எதிர்த்து நான் கேள்வி எழுப்பியபோது கட்சி தொண்டர்களாலேயே நான் தாக்கப்பட்டேன். இப்போது, ​​பிரியங்கா காந்தி அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்று நான் காத்திருக்கிறேன் ”, என்று அவர் ANI இடம் கூறினார்.

மறுபுறம், திரிபாதி, தாராவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்,  ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டார். எந்தவொரு வழக்கிலும் அவர் சம்பந்தப்படவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், தேசிய மகளிர் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) தலைவர் ரேகா சர்மா, இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பாஜக எம்எல்ஏ ஜான்மேஜயா சிங் மறைந்ததைத் தொடர்ந்து தியோரியா சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதால் இடைத்தேர்தல் நடத்துவது அவசியமானது. இந்த இடத்திற்கான இடைத்தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.

ALSO READ | மலிவான விலையில் தங்கத்தை வாங்கும் பொன்னான வாய்ப்பை வழங்கும் மத்திய அரசு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News