₹ 50,000-க்கு மேலாக பண பரிவர்த்தனைக்கு PAN தேவையில்லை ஆதார் போதும்...

50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய்த்துறை செயலர் அறிவிப்பு!!

Last Updated : Jul 7, 2019, 12:42 PM IST
₹ 50,000-க்கு மேலாக பண பரிவர்த்தனைக்கு PAN தேவையில்லை ஆதார் போதும்...

50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய்த்துறை செயலர் அறிவிப்பு!!

இந்தியாவின் தேசிய பயோமெட்ரிக் ID ஆதார் இப்போது ரூ .50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகளுக்காகவும், பாரம்பரியமாக வருமான வரி பான் எண் கட்டாயமாக இருந்த மற்ற அனைத்து நோக்கங்களுக்காகவும் மேற்கோள் காட்டப்படலாம் என்று ஒரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். பான் மேற்கோள் காட்டுவது இப்போது கட்டாயமாக உள்ள அனைத்து இடங்களிலும் ஆதார் ஏற்றுக்கொள்ள வங்கிகளும் பிற நிறுவனங்களும் பின்தளத்தில் மேம்படுத்தும் என்று வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே சனிக்கிழமை தெரிவித்தார்.

சமீபத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயம். ஆனால், பட்ஜெட் உரையின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பான் கார்டுக்குப் பதில் ஆதாரையோ, ஆதாருக்குப் பதில் பான் எண்ணையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, நாடு முழுவதும் 120 கோடி பேர் ஆதார் வைத்திருப்பதாகவும், 20 கோடி பேரிடம் பான் அட்டை இருப்பதாகவும் தெரிவித்தார்.

பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என்பதால், ஆதாரே வசதி மிக்கது என்றும் பான் அட்டை தேவை இல்லை என்றும் கூறினார். அப்படி என்றால் பான் அட்டை பயன்பாட்டில் இருக்காதா என்று கேட்ட போது, ஆதாரும், பான் எண்ணும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மக்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.

 

More Stories

Trending News