திருத்தணி ஆடி கிருத்திகை: நடிகை ரோஜா காவடி வேண்டுதலை நிறைவேற்றினார்

Aadi Kiruthigai in Thiruthani: திருத்தணியில் நடிகையும் ஆந்திர சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜா திருத்தணி முருகன் கோயிலில் காவடி எடுத்து சாமி தரிசனம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 23, 2022, 10:08 PM IST
  • தமிழகம் முழுவதும் ஆடி கிருத்திகை பக்தி பரவசத்துடன் அனுசரிக்கப்பட்டது
  • திருத்தணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  • நடிகை ரோஜாவும் கணவர் இயக்குநர் செல்வமணியும் காவடி எடுத்து காணிக்கை செலுத்தினார்கள்
திருத்தணி ஆடி கிருத்திகை: நடிகை ரோஜா காவடி வேண்டுதலை நிறைவேற்றினார் title=

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சருமான ரோஜா குடும்பத்தாருடன் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணி சாமி திருக்கோயில். இந்த கோயிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிக்கிருத்திகை நாளான இன்று திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்தும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். 

தமிழ் திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவரும் பிரபல இயக்குனருமான ஆர் கே செல்வ மணியுடன் காவடி எடுத்து வந்து முருகனுக்கு காவடி செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார். 

வேண்டுதலை நிறைவேற்றிய ஆந்திர அமைச்சர் ரோஜா செல்வமணி முருகனை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் வந்து தரிசித்து செல்வதாக தெரிவித்தார்.

தானும் குடும்பமும் மட்டுமல்லாது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தாரும் நீடூழி வாழ முருகனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | Lucky Numbers of 22 July: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாளை சிறப்பு நாள் 

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்தனர்.

சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சென்ற சுவாமி, அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த தெப்பத் திருவிழாவை பக்தர்கள் குளத்தின் நான்கு பக்கப் படிகளிலும்  அமர்ந்து  அரோகரா அரோகரா என்று பக்தி முழங்க விண்ணைப் பிளக்க கோஷம் எழுப்பி, சுவாமியை தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் விஜயா ஆகியோர் செய்திருந்தார். இந்த தெப்ப திருவிழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.வாசர்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல். பி.ஜான் வர்கிஸ்  ஆகியோரும் முருகப்பெருமானை தரிசித்தனர்.

மேலும் படிக்க | இந்த ராசிகளுக்கு அடித்தது யோகம்: புதனும் சுக்கிரனும் சேர்ந்து நன்மை செய்வார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News