திருச்சி: நடுவானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது

Trichy Sharjah Air India FLight: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமட்டு வந்த நிலையில், தற்போது பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2024, 08:51 PM IST
  • விமானத்தை தரையிறக்க முடியாமல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடு வானில் தவிப்பு.
  • தயார் நிலையில் இருந்த 18 ஆம்புலன்ஸ்கள்.
  • பத்திரமாக தரை இறங்கிய விமானம்.
திருச்சி: நடுவானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது title=

Trichy Sharjah Air India FLight: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமட்டு வந்த நிலையில், தற்போது பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் பெல்லி லாண்டிங் என்ற முறையில் புல் தரையில் தரையிறக்கப்பட்டது. இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு கொச்சின் விமான நிலையத்தில் இதே முறையில் ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமானம் வெற்றிகரமாக தரை இறங்கிய பின், X -இல் இது குறித்து பதிவிட்ட முதல்வர் முக ஸ்டாலின், '#AirIndiaExpress விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியர் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு வாகங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன். மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்.' என தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து இன்று மாலை சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. சுமார் 5.40 மணிக்கு விமானம் ஓடுதளத்திலிருந்து வானில் பறந்த நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து எரி பொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்தது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன.

மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருந்த நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்தனர். அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை அளித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்தனர். மேலும் விமானம் தர இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சிறிது நேரத்தில் பத்திரமாக விமானம் தரையறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது அந்த விமானம்  பத்திரமாக தரையிறங்கியுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | ரத்தன் டாடா: மறைந்த மாமனிதரை மக்கள் மனதில் அமரராக்குவோம்-ஜீ செய்திக்குறிப்பு

மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை.. நாமக்கல், திருச்சிக்கு ஆரஞ்சு அலெர்ட் - கனமழை கொட்டப்போகுது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News