Air Asia விமான நிறுவனம் அறிவித்துள்ள புதிய ஆஃபர்!

Air Asia விமான நிறுவனம் புதிய சலுகை விலைப் பயணம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சலுகையானது வரும் மே 28-ம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வாங்கப்படும்.

Last Updated : Mar 26, 2018, 10:24 AM IST
Air Asia விமான நிறுவனம் அறிவித்துள்ள புதிய ஆஃபர்! title=

Air Asia விமான நிறுவனம் புதிய சலுகை விலைப் பயணம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சலுகையானது வரும் மே 28-ம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வாங்கப்படும்.

ஒருவழிப் பாதையாக வழங்கப்படும் டிக்கெட்கள் ரூ.850 முதல் தொடங்குகின்றன. இதற்கான முன்பதிவை (airasia.com) அல்லது airasia மொபைல் ஆப் மூலம் செய்யலாம்.

சர்வதேச பயணமான கோலாலம்பூர், பேங்காக், புகெத், மெல்பெர்ன் ஆகிய நகரங்களுக்கும் சலுகை பொருந்தும் என Air Asia விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது. அங்கு ஒருவழிப் பயணமாக செல்ல ரூ.1,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உள்ளூர் பயணமான பெங்களூரு, ராஞ்சி, ஜெய்ப்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், நாக்பூர், கொச்சி, ஐதராபாத், புனே, கௌஹாத்தி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு ஒருவழிப் பயணமாக செல்ல ரூ.850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பயணங்களுக்கு புரமோஷனல் ஆஃபர்களும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News