டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டம்..!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.56 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்தினை கடந்தது. தலைநகர் டெல்லி தேசிய அளவில் தொற்று பாதித்த மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் COVID-19 தொற்றை கட்டுப்படுத்த தில்லி அரசு முடிவு புதிய திட்டம் ஒன்றை அமல் படுத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை சரிபார்க்கும் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீடும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேற்று மட்டும் நிலவரப்படி 3,947 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறியபட்டுள்ளது.
READ | எச்சரிக்கை...! மதுரையை தொடர்ந்து தேனி-யிலும் கடுமையான ஊரடங்கு...
மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளும் ஜூன் 30 க்குள் பரிசோதனை செய்யப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதல்வருக்கு இடையிலான தொடர் சந்திப்புகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய கோவிட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள சுமார் 261 கட்டுப்பாட்டு மண்டலங்களில், கண்காணிப்பு மற்றும் தொடர்பு தடமறிதல் பலப்படுத்தப்படும். சுமார் 45 சதவீத நோயாளிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கிளஸ்டரிங் அறிகுறிகளைக் காட்டுகின்றன என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவுக்குப் பிறகு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலமாக டெல்லி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தை முந்தியது. டெல்லியில் COVID-19 உடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.