தனது வாழ்க்கையை மனித சேவைக்காக அர்ப்பணித்த Kolkata-வின் Real Life Hero Bipin Ganatra!!

கொல்கத்தாவில் ஒரு தேவதையாக மாறிப்போன பிபின் என்பவரின் கேள்விப்படாத கதையை பார்க்கலாம். இவரது கதையைக் கேட்டால், உங்கள் மனதிலும் உத்வேகம் பிறக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 07:45 PM IST
  • மேற்கு வங்கம் நாட்டிற்கு பல சிறந்த ஆளுமைகளை வழங்கியுள்ளது.
  • பிபின் ஒரு தீயணைப்பு வீரராக பல முறை தனது உயிரைப் பணயம் வைத்து பிறர் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
  • இந்திய அரசாங்கம் அவருக்கு 2017 ல் பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது.
தனது வாழ்க்கையை மனித சேவைக்காக அர்ப்பணித்த Kolkata-வின் Real Life Hero Bipin Ganatra!! title=

கொல்கத்தா: பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலர் நம் கண்களில் படாமலேயே இருந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இன்று இங்கு பார்க்கலாம்.

மேற்கு வங்கம் (West Bengal) நாட்டிற்கு பல சிறந்த ஆளுமைகளை வழங்கியுள்ளது. கொல்கத்தாவைச் (Kolkata) சேர்ந்த பலர் நாட்டிலும் வெளிநாடுகளிலும் மண்ணின் பெயரை பெருமைப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பரைப் பற்றி நீங்களும் படித்திருப்பீர்கள். ஆனால் இன்றும் நிஜ வாழ்க்கையில் அப்படிபட்ட பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உலகம் இன்னும் அறியவில்லை. கொல்கத்தாவில் ஒரு தேவதையாக மாறிப்போன பிபின் என்பவரின் கேள்விப்படாத கதையை இன்று பார்க்கலாம். இவரது கதையைக் கேட்டால், உங்கள் மனதிலும் உத்வேகம் பிறக்கும்.

40 ஆண்டுகளாக மக்கள் உயிரைக் காப்பாற்றி வருகிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த பிபின் கணாத்ரா (Bipin Ganatra) ஒரு எலக்ட்ரீஷியன் அதாவது மின்சார வேலைகளைப் பார்ப்பவராக உள்ளார். தன் சுய விருப்பத்தில் ஒரு தீயணைப்பு வீரராகவும் (Fire Fighter) பணிபுரிந்து வருகிறார். தன்னைப் பற்றி அதிகம் தம்பட்டம் அடிக்காத நாட்டின் உண்மையான ஹீரோக்களில் அவரும் ஒருவர். இவர் ஒரு சாதாரண மனிதனாகத் தன்னைக் காட்டிக்கொண்டு மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்து வருகிறார். அவரது சேவை மனப்பான்மையால் அரசாங்கம் ஈர்க்கப்பட்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது (Padma Shri) வழங்கி கௌரவித்தது.

ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!

சம்பளம் இல்லாமல் சேவை செய்கிறார்

நான்கு தசாப்தங்களாக மனிதகுலத்திற்கு சேவை செய்து வரும் பிபின் கணாத்ரா (Bipin Ganatra), பல முறை தனது உயிரைப் பணயம் வைத்து பிறர் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவர் தான் செய்யும் பணிகளுக்கும் சேவைகளுக்கும் பணம் பெறுவதில்லை. மனித சேவையை கடவுளின் சேவையாக தான் கருதுவதாக பிபின் கூறுகிறார். ஆகவே அவர் தனது சேவைகளை மதிப்பிடுவதில்லை.

ஒரு தீயணைப்பு வீரராக அவர் ஆயிரக்கணக்கான தீ விபத்துகளில் தீயை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளார். தீயால் எற்பட்ட குப்பைகளை அகற்றும் வேலைகளைக் கூட அவர் செய்ய வெட்கப்பட்டதில்லை.

பல மணி நேரம் இடைவிடாமலும் அயராமலும் உழைக்கும் அவர் ஒரு உண்மையான ஹீரோ. அவர் சரியான நேரத்தில் சம்பவ இடத்தை அடைந்து பல முறை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

அவர் தீயணைப்பு வீரராகக் காரணம்

பிபின் கணாத்ரா (Bipin Ganatra) தனது 12 வயதில், தனது மூத்த சகோதரர் நரேந்திராவை ஒரு தீ விபத்தில் இழந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, தீ விபத்துகளில் மற்றவர்களின் உயிரை காப்பாற்றுவதை தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டார். அவர் தனது கடைசி மூச்சு வரை இந்தப் பணியை தொடர்ந்து செய்யப் போவதாகக் கூறுகிறார். அவர் எத்தனை பேரை காப்பாற்றியுள்ளார், எத்தனை இடங்களில் தீயை அணைக்க உதவியுள்ளார் என்பது அவருக்கே தெரியாது என அவர் கூறுகிறார்.

வீட்டுச் செலவுகளுக்கு என்ன செய்கிறார்?

எலக்ட்ரீஷியனாக (Electrician) பணியாற்றுவதில் அவருக்கு ஒரு மாதத்திற்கு 2500 ரூபாய் கிடைக்கிறது. இதை வைத்து அவர் தனது குடும்பத்தை நடத்துகிறார். தன் சம்பளத்திற்குள் சிக்கனமாக குடும்பத்தை நடத்துகிறார். என்ன கஷ்டம் வந்தாலும், தான் தீயணைக்கும் இடங்களிலோ அல்லது தீயிலிருந்து உயிர்களைக் காக்கும் இடங்களிலோ அவர் எந்த பணத்தையும் பெறுவதில்லை. பலர் வருந்தி அவருக்கு அளிக்க முற்பட்ட போதும் அவர், அவற்றை திடமாக மறுத்து விட்டார். அவரது உன்னதமான சேவை மனப்பான்மையையும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், பிறர் உயிரைக் காக்கும் அவரது மனிதத் தன்மையையும் பாராட்டி, இந்திய அரசாங்கம் அவருக்கு 2017 ல் பத்மஸ்ரீ விருது (Padma Shri) வழங்கி கௌரவித்தது. 

ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News