தில்லியில் எகிறும் தொற்று பாதிப்பு; துணை நிலை ஆளுநர் தலைமையில் முக்கிய கூட்டம்

தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) ஏப்ரல் 20 அன்று முக்கிய கூட்டத்தை கூட்டி உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2022, 08:56 AM IST
  • டெல்லியில் புதிதாக 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.
  • தலைநகரில் கோவிட்-19 பாசிடிவிடி விகிதம் 4.21 சதவீதமாக உள்ளது.
  • தொற்று எண்ணிக்கை 18,68,550 ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் எகிறும் தொற்று பாதிப்பு; துணை நிலை ஆளுநர் தலைமையில் முக்கிய கூட்டம் title=

புது தில்லி: கோவிட்-19  நான்காவது அலை பீதிக்கு மத்தியில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17, 2022) 517 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாயின. இது முந்தைய நாளை விட 56 அதிகம், பாசிடிவிடி விகிதம், அதாவது பரிசோதனை செய்தவர்களில், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4.21 சதவீதம் என்று தில்லி சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய தொற்று பாதிப்புகளுடன், தலைநகரின் மொத்த தொற்று எண்ணிக்கை 18,68,550 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 26,160  என்ற அளவில் உள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக தினசரி கோவிட்-19 தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நகரில் சனிக்கிழமை 461 கோவிட் தொற்று பாதிப்புகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை, டெல்லியில் 366 தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, வியாழக்கிழமை, வழக்குகளின் எண்ணிக்கை 325 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள் காலை நிலவரப்படி, டெல்லி மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்காக 9,662 படுக்கைகள் காலியாக உள்ளன. தலைநகரில் தற்போது 9,156 காலியான கோவிட்-19 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 2,174 ICU படுக்கைகள் உள்ளன. டெல்லி மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களுடன் கூடிய 1,246 ICU படுக்கைகளும் உள்ளன. தேசிய தலைநகரில் மொத்தம் 964 கோவிட்-19 நோயாளிகள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!
 

தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA) ஏப்ரல் 20 அன்று ஒரு முக்கிய கூட்டத்தை நடத்துகிறது, அதில் மாஸ்குகளின் கட்டாய பயன்பாட்டை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். தில்லி அரசின் சுகாதாரத் துறை, ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், பொது இடங்களில் முகமூடி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கோவிட் நிலைமை குறித்து விவாதிக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தலைமையில் DDMA கூட்டம் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும். தேசிய தலைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும்.

டெல்லியில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள நபர்கள் தாங்களே முன் வந்து பரிசோதிக்க வேண்டும் என்றும், தொற்று பரவுவதை தடுக்க மாஸ்க அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

"அறிகுறிகள் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் கோவிட்-19 சோதனைக்கு செல்வதில்லை. இப்போது, ​​தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, பாசிட்டிவிட்டி விகிதம் மீண்டும் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருப்பதால், அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு செல்லுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று LNJP மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News