இந்தியாவுக்கு வருகை தரும் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல்...

ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் விரைவில் இந்தியாவுக்கு வருகை தரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Oct 30, 2019, 04:27 PM IST
இந்தியாவுக்கு வருகை தரும் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல்... title=

ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் விரைவில் இந்தியாவுக்கு வருகை தரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் வால்டர் ஜே. லிண்டர் தெரிவிக்கையில்., "​​அவர் விரைவில் இந்தியாவுக்கு செல்லப் போவதாகக் கூறினார்." என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அவர் 12 அமைச்சர்களுடன் வருவார் என்று தூதர் தெரிவித்துள்ளார். அவருடன் வரும் அனைத்து அமைச்சர்களும் ஜெர்மனியின் கிட்டத்தட்ட அனைத்து அமைச்சுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கேலா மேர்க்கெல் வருகையின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையே பல பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது செயற்கை நுண்ணறிவு முதல் விவசாயம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கலின் இந்தியா பயணத்தின் போது, ​​காஷ்மீர் பிரச்சினை ஜெர்மனியால் இந்தியப் பிரதமரிடம் எழுப்பப்படுமா என்று தூதர் வால்டரிடம் கேட்கப்பட்டதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தூதர் இரு தலைவர்களுக்கிடையில் நல்ல உறவுகள் இருப்பதாகவும், அவர்களால் எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேச முடியும் என்று நீங்கள் நம்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் குழு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, சுற்றுப்பயணத்தைப் பற்றி தான் செய்தித்தாளில் படித்ததாகக் ரதுட் வால்டர் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்., இது முற்றிலும் தனிப்பட்ட வருகை என்று கூறி ஐரோப்பிய ஒன்றிய தரப்பிலிருந்து அறிக்கைகளையும் படித்தேன். நான் அதை அவர்களிடம் விட்டு விடுகிறேன். அதே நேரத்தில், ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கலின் இந்தியாவுக்கான வருகையின் போது இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

Trending News