2023ம் ஆண்டில் இந்தியாவில் விலைவாசி குறையும்: மகிழ்ச்சித் தகவலை அளித்த IMF!

IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2023, 01:53 PM IST
  • 'உலகப் பொருளாதார சூழ்நிலை' குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ள IMF
  • இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைய வாய்ப்பு.
  • 2024 க்குள் 80 சதவீதத்திற்கும் அதிகமான நாடுகளில் தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக இருக்கும்.
2023ம் ஆண்டில் இந்தியாவில் விலைவாசி குறையும்: மகிழ்ச்சித் தகவலை அளித்த IMF! title=

Inflation in India​: இந்தியாவில். இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறையலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2024ல் இது 4 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ல் பணவீக்கம் மேலும் குறையும்

மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பணவீக்கம் 2022ல் 6.8 சதவீதத்தில் இருந்து 2023ல், 5 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சித் துறைத் தலைவர் டேனியல் லே கூறியுள்ளார். 2024ல் இது மேலும் 4 சதவீதமாக குறையும். இது மத்திய வங்கியின் நடவடிக்கைகளை ஓரளவு பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Budget 2023: ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

2022 உடன் ஒப்பிடும்போது குறையும் பணவீக்கம் 

IMF, 'உலகப் பொருளாதார சூழ்நிலை' குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் சுமார் 84 சதவீத நாடுகளில் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டு குறையும் என கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய பணவீக்கம்

உலகளாவிய பணவீக்கம் 2022ம் ஆண்டில் 8.8 சதவீதத்திலிருந்து 2023ம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2024 இல் 4.3 சதவீதமாகவும் குறையும் என்று அறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்று நோய்க்கு முந்தைய காலத்தில் (2017-19), இது சுமார் 3.5 சதவீதமாக இருந்தது.

உலகளாவிய தேவை காரணமாக ஏற்படும் தாக்கம் 

சர்வதேச எரிபொருள் விலை குறைப்பு மற்றும் உலகளாவிய தேவையின் காரணமாக எரிபொருள் அல்லாத விலைகள் குறைவதன் அடிப்படையில் பணவீக்கத்தில் கணிக்கப்பட்ட சரிவு ஓரளவுக்கு அடிப்படையாக உள்ளது. பண இறுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் இது காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்கம் 6.9 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறையும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

நிபுணரின் கருத்து 

ஒரு வலைப்பதிவு இடுகையில், ஆராய்ச்சித் துறையின் இயக்குநரும், IMF என்னும் சர்வதேச நாணய நிதியத்தின்  தலைமைப் பொருளாதார நிபுணருமான Pierre-Olivier Gorinches, இந்த ஆண்டு உலகளாவிய பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், 2024 க்குள் 80 சதவீதத்திற்கும் அதிகமான நாடுகளில் தொற்று நோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த பட்ஜெட்டில் பல மாஸ் அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News