பாஜக மிரட்டல் காரணமாக பெட்ரோல் பங்குகள் போராட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜகவினரின் மிரட்டல் காரணமாக டெல்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என டெல்லி முதல் அமைச்சர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2018, 08:57 PM IST
பாஜக மிரட்டல் காரணமாக பெட்ரோல் பங்குகள் போராட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் title=

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சமாளிக்க டெல்லி அரசுக்கு வாட் வரியைக் குறைக்க வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் டெல்லி அரசு மறுத்து விட்டது. இதனால் டெல்லியில் உள்ள 400 பெட்ரோல் பங்குகள் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 5 மணி வரை செயல்படாது என்று தில்லி பெட்ரோல் விநியோகிகள் சங்கம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் கால் டாக்ஸி, ஆட்டோ சேவை முற்றிலும் முடங்கியது. மக்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முக்கிய காரணம் பாஜக தான் எனக்கூறி முதல் அமைச்சர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதவிட்டுள்ளது. அதில், நான்கு முக்கிய பெருநகரங்களில் டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு. அதேவேளையில் மும்பையில் அதிகபட்ச விலையில் பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. ஆனால் அங்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. காரணம் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது என்று கூறியுள்ளார். 

 

டெல்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு, "நீங்கள் போராட்டம் நடத்தாமல் இருந்தால் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகுவீர்கள்" என பாஜகவினர் மிரட்டியுள்ளனர். போராட்டம் நடத்தவில்லை என்றால் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் டெல்லி மக்களை தொந்தரவு செய்வதை பாஜகவினர் கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

கடந்த நான்கு ஆண்டுகளில், பெட்ரோல் மீது பிரதமர் மோடி தான் வரி விதித்து வருகிறார். ஆனால் நாங்கள் வரி விதிக்கவில்லை. மோடிஜி அவர்களே வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் கொடுங்கள். 

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வரவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Trending News