Arvind Kejriwal appeal to PM Modi: கேஜ்ரிவாலின் தரமான ஐடியா! ரூபாய் நோட்டில் சாமி படத்தை போடுங்க

Currency vs ARVIND KEJIRIWAL: இந்திய ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள ஐடியா வைரலாகிறது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2022, 01:19 PM IST
  • ரூபாய் நோட்டுல வாஸ்து சரியில்ல! லட்சுமி கணேஷ் சேர்த்தா சரியாயிடும்!
  • அட்வைஸ் சொல்லும் அர்விந்த் கேஜ்ரிவால்
  • வைரலாகும் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஐஏஎஸ் ஐடியா
Arvind Kejriwal appeal to PM Modi: கேஜ்ரிவாலின் தரமான ஐடியா! ரூபாய் நோட்டில் சாமி படத்தை போடுங்க title=

புதுடெல்லி: இந்திய ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள ஐடியா வைரலாகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று (அக்டோபர் 26, புதன்கிழமை) ஒரு 'முக்கியமான' செய்தியாளர் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேசினார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், நாட்டிற்கு கடவுளின் ஆசீர்வாதம் தேவை என்று சொல்லி தெரிவித்த பரிந்துரைகள் வித்தியாசமானவை.

இந்திய ரூபாய் நோட்டுகளில் .மகாத்மா காந்தியுடன் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

"நம்து புதிய ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் புகைப்படத்துடன் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படத்தை வைக்க மத்திய அரசு மற்றும் பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் படிக்க | 45 நாள்களில் பதவி காலி... லிஸ் ட்ரஸ் ராஜினாமா - இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்? 

ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும், மறுபுறம் லட்சுமி தேவி மற்றும் விக்ன விநாயகரின் புகைப்படமும் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால், முழு நாட்டுக்கும் கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

பழைய நோட்டுகளை மாற்ற வேண்டும் என்று தான் பரிந்துரைக்கவில்லை என்றும், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்போது, இந்த நடைமுறையை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் கூறினார். "பழைய நாணயத்தை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை, ஆனால் புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் கணபதி மற்றும் லட்சுமி தேவியின் படங்கள் இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | ஒரு நட்சத்திரத்தின் இறப்பு இவ்வளவு அழகாய் இருக்குமா? இது Supernova புகைப்படம்

இந்தோனேசியாவின் நாணயத்தில் விநாயகப் பெருமானின் படம் உள்ளது

இந்தோனேசியாவின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அர்விந்த் கேஜ்ரிவால், "இந்தோனேசியா ஒரு முஸ்லீம் நாடு, அந்நாட்டின் மக்கள்தொகையில் 85% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அங்கு இந்துக்களின் மக்கள் தொகை, மொத்த மக்கள்த்தொகையில் 2% மட்டுமே என்றாலும், அவர்களின் நாணயத்தில் விநாயகப் பெருமானின் படம் உள்ளது. இது ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

"ரூபாய் நோட்டில், லட்சுமி தேவியும், விக்ன விநாயகரும் இடம் பெருவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று நான் கூறவில்லை, அதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படும், ஆனால் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே முயற்சிகள் பலனளிக்கும்" என்று கெஜ்ரிவால் கூறினார்.

தீபாவளி பூஜை செய்யும் போது தான், தனக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும், இந்த எண்னத்தை எதிர்க்க வேண்டாம் என்றும் கூறிய அவர், நாட்டின் செழிப்புக்காகவாவது இந்த கருத்தை எதிர்க்க வேண்டாம் என்ரு கூறினார்.

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News