மக்களவை தேர்தல் 2019: ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

இன்று ஆம் ஆத்மி கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 25, 2019, 02:21 PM IST
மக்களவை தேர்தல் 2019: ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!! title=

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் அடுத்த மாதம் மே 19 ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. டெல்லிக்கு அடுத்த மாதம் மே 12 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் ஏழு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்ப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இரண்டு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்தநிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் மற்றும் ராகவ் சதா ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.

"இந்த அறிக்கையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 2019 மக்களவைத் தேர்தல் என்பது நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதும், நாட்டின் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகும். மேலும் டெல்லி எதிர்க்கட்சியையும், மத்திய அரசாங்கத்தையும் கடுமையாக தாக்கி பேசினார். டெல்லி மக்கள் இரண்டாம் வகுப்பு குடிமகனாக நடத்தப்படுவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். 

யார் பிரதமராக வந்தாலும் டெல்லி முழு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி முழு மாநிலமாக இருந்தால் ஜன்லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கும். லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Trending News