அசாம் மிசோரம் பிரச்சனை: எல்லை மோதலில் 6 போலீசார் பலி; அதிகரிக்கும் பதட்டம்

அசாம் காவல்துறையை சேர்ந்த ஆறு போலீசார் உயிர் இழந்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதிப்படுத்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 08:34 PM IST
  • அசாம் காவல்துறையை சேர்ந்த ஆறு போலீசார் உயிர் இழந்ததாத் தகவல்.
  • போலீஸ் மீது கல் வீசுதல் மற்றும் தாக்குதல் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது.
  • அசாம் அரசாங்க அதிகாரிகள் மீது கல் வீசுதல் மற்றும் தாக்குதல் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது.
அசாம் மிசோரம் பிரச்சனை: எல்லை மோதலில் 6 போலீசார் பலி; அதிகரிக்கும் பதட்டம் title=

புது டெல்லி: மிசோரத்தைச் சேர்ந்த சில பேர் அசாம் அரசு அதிகாரிகளை நோக்கி கல்லெறிந்து தாக்கியதாக அசாம் காவல்துறை குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து, அசாம் காவல்துறையை சேர்ந்த ஆறு போலீசார் உயிர் இழந்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தை அடுத்து அசாம் காவல்துறையை சேர்ந்த ஆறு துணிச்சலான போலீசார் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர் எனத் தெரிவிப்பதில் நான் மிகுந்த வேதனையடைகிறேன். அவர்களின் குடும்பத்தர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்" என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்துள்ளார். 

 

"மிசோரத்தைச் சேர்ந்தவர்கள் அசாமின் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க லைலாப்பூரில் நிறுத்தப்பட்டுள்ள அசாம் அரசாங்க அதிகாரிகள் மீது கல் வீசுதல் மற்றும் தாக்குதல் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது" என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மிசோரம் முதல்வர் சோரம் தங்கா (Zoramthanga) ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து அசாம் காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

 

வன்முறை மோதல்களின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த முதல்வர் சோரம்தங்கா, இது குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்தியுள்ளார். 

மேலும் அவர் தனது ட்விட்டில், அப்பாவி தம்பதியினர் கச்சார் வழியாக மிசோரமுக்குத் திரும்பும் வழியில் குண்டர்களால் கொள்ளையடிக்கப்பட்டனர். இந்த வன்முறைச் செயல்களை நீங்கள் எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறீர்கள்? என்று அவர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் வன்முறையின் வீடியோவை ட்விட்டரில் ட்வீட் செய்து பிரதமர் நரேந்திர மோடியையும், அமித்ஷாவும் இந்த பிரச்சனைக்கு தேர்வுக்கான வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News