அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை வழங்கப்படமாட்டாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அசாமில் வறுமையை ஒழிக்கவும், குழந்தைகள் இறப்பை தடுக்கவும் புதிய மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வோருக்கு இனி அரசு வேலை வழங்கப்படாது.
இந்த நிபந்தனைக்குட்பட்டு அரசு வேலை பெறும் நபர்கள் தாங்கள் பணி ஓய்வு பெறும் வரை இத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். அதேபோல் குழந்தை திருமணம், அதாவது திருமண வயதுக்கு முன்பே திருமணம் செய்திருந்தாலும் அவர்களுக்கு அரசு வேலை கிடையாது. இந்த புதிய கொள்கை மூலம் மாநிலத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பல்கலைக்கழக அளவு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் பிஸ்வா சர்மா தெரிவித்தார்.