புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்திற்க்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மக்களவைத் தேர்தல் வெற்றியின் பின்னணியில் இரு மாநிலங்களிலும் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முற்படும் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொண்டு உள்ளது. இரண்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தலோடு, காலியாக உள்ள 51 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும், இரண்டு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் என மொத்தம் 18 மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. மகாராஷ்டிராவில் மாநில காவல்துறை மற்றும் மத்திய படைகளைச் சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்தல் களத்தில் பாதுகாப்பில் இருந்தனர். அதே நேரத்தில் ஹரியானாவில் 75,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.
மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும், அதேபோல ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மாலை ஆறு மணி நிலவரப்படி இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்பட்டது. அதில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 6 மணி வரை 55.33 சதவீதமும், ஹரியானா மாநிலத்தில் 67.97 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது ஊடகங்கள் தங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலான கணிப்புக்கள் இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.