அயோத்தி வழக்கில் வரும் வியாழக் கிழமைக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஏற்கனவே சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சுமுக தீர்வு காண்பதற்காக மூன்று பேர் கொண்டு மத்தியஸ்தர் குழுவை நியமனம் செய்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தீர்வு காணும் படி அவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில் மூன்று பேர் நடுவர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் அயோத்தி வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரி கோபால் சிங் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவர் சார்பில் மனுவை தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, அவசர வழக்காக ஏற்கக் கோரும் மனுவை உச்சநதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளதாக தெரிவித்தார். இன்று காலை 10.30 மணிக்கு இந்த மனுமீது விசாரணை தொடங்கியது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதாடுகையில், நேர்மறையான முடிவை அளிக்க மத்தியஸ்த குழு அறிக்கை தராததால், வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார். முஸ்லிம் அமைப்புகள் தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் வாதாடுகையில், மத்தியஸ்த குழுவை விமர்சிக்க இது சரியான நேரம் அல்ல என்றார்.
Hearing in SC on plea for early hearing on Ayodhya land dispute case: Supreme Court asks the mediation panel to submit a detailed report by July 25, https://t.co/eKR8G7Lj5v
— ANI (@ANI) July 11, 2019
இதன் பின்னர் உச்சநீதினம்ற்றம், கோர்ட் மத்தியஸ்த குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டும். மத்தியஸ்த குழு அறிக்கை அளிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், வரும் 18 ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யும் படி சமரசக்குழுவிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.