‘புகைபிடிக்காதீர்கள்’ கும்பமேளாவில் சாதுக்களுக்கு ராம்தேவ் வலியுறுத்தல்....

ராமரும் கிருஷ்ணரும் புகைபிடிக்காத போது நாம் ஏன் புகைபிடிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : Jan 31, 2019, 10:18 AM IST
‘புகைபிடிக்காதீர்கள்’ கும்பமேளாவில் சாதுக்களுக்கு ராம்தேவ் வலியுறுத்தல்....  title=

ராமரும் கிருஷ்ணரும் புகைபிடிக்காத போது நாம் ஏன் புகைபிடிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக புகழ் பெற்ற கும்ப மேளா, உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் கடந்த ஜனவரி 15 ஆம் நாள் துவங்கி வரும் மார்ச் 4 ஆம் நாள் வரை வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. துறவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான சாதுக்கள் 12 ஆண்டுக்கொரு முறை நடைபெறும் கும்பமேளாவில் திரள்வது வழக்கம். இந்த விழாவிற்காக ₹4,200 கோடி ரூபாய் மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு கும்ப மேளாவிற்கு ஒதுக்கிய தொகையை காட்டிலும் இந்த தொகை ஆனது மும்மடங்கு அதிகமாகும்.

இந்நிலையில் தற்போது நடைப்பெற்றும் வரும் 2019 ஆம் ஆண்டு கும்பமேளா மூலம் உத்திரபிரதேச அரசாங்கத்திற்கு சுமார் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, நேற்று கும்பமேளா நிகழ்சியில் பதாஞ்சலி நிறுவன தலைவரும், யோகா குருவுமான பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது கும்பமேளா நடைபெறும், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் கங்கைக் கரையில் திரண்ட சாதுக்களிடம் அவர் கலந்துரையாடினார். இவர்களிடம் கஞ்சா, சுருட்டு மற்றும் புகைப் பழக்கம் தாராளமாக இருக்கிறது. இந்நிலையில் சாதுக்களிடம் பேசிய பாபா ராம்தேவ், புகையிலை மற்றும் போதை வஸ்துகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்: நாம் பின்பற்றும் ராமரும், கிருஷ்ணரும் புகைபிடிக்காத போது நாம் மட்டும் ஏன் புகைபிடிக்க வேண்டும் ? புகைபிடிப்பதை விடுவோம் என உறுதி ஏற்போம். நமது வீடு, தாய், தந்தை உள்ளிட்ட அனைத்தையும் விடுத்து நாம் சாதுக்களாகி உள்ள நம்மால் ஏன் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது. நான் இளைஞர்களிடம் புகையிலையையும், புகைபிடித்தலையும் விடும்படி வலியுறுத்தி வருகிறேன். மகா ஆத்மாக்களான நம்மால் ஏன் முடியாது என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பல சாதுக்களிடம் இருந்து சில்லம் எனப்படும் புகைப்பிடிக்கும் கருவியை சேகரித்து வந்துள்ள ராம்தேவ், அவற்றை தான் கட்ட இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். 55 நாட்கள் நடக்கும் கும்பமேளா வரும் மார்ச் 4 ஆம்ம் தேதியுடன் நிறைவடைகிறது. உலகில் அதிகமானர்கள் கூடும் விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஒரு லட்சமத்திற்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு, புனிதநீராடி வருகின்றனர். கும்பமேளாவின் போது கங்கையில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும் என்பது நம்பிக்கை.  

 

Trending News