பலுசிஸ்தான் புக்டிக்கு இந்திய குடியுரிமை?

Last Updated : Sep 16, 2016, 07:53 PM IST
பலுசிஸ்தான் புக்டிக்கு இந்திய குடியுரிமை?

பலுசிஸ்தான் போராட்ட குழுவின் தலைவருக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

பலுசிஸ்தான் புக்டிக்கும், அவரது குழுவினருக்கும் குடியுரிமை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலுசிஸ்தான் தலைவர் பிரஹூம்தாக் புக்டி, இந்திய அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.

புக்டி தவிர அவரது நம்பிக்கைக்கு உரியவர்களான ஷெர் முகமது புக்டி மற்றும் அஜிஜூல்லா புக்டி ஆகியோருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் வாசிகள் ஆப்கஸ்தானில் அடைக்கலம் கேட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பலுசிஸ்தான் வாசிகள் வசிக்கின்றனர்.

வரும் செப்டம்பர் 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் கூட்டத்தில் பலுசிஸ்தான் போராட்ட குழு, புக்டிக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். 

More Stories

Trending News